மக்களே உஷார்.. 3 நாட்களுக்கு சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து.. எந்தெந்த ஏரியா?
Chennai Water Supply Suspended : சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் 2025 ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்கள் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் பிரதான குழாயை மற்றொரு குழாயோடு இணைக்கும் பணி நடைபெறு உள்ளதால், குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் ரத்து
சென்னை, ஜூலை 26 : சென்னையில் 2025 ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி குடிநீர் விநியோகம் (Chennai Water Supply Suspended) ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் பிரதான குழயை, மற்றொரு குழாயோடு இணைக்கம் பணியால் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. சென்னையின் நீர் ஆதரமாக இருப்பது பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் மட்டுமே. இந்த ஏரிகளில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னை மாநகரின் ஒருநாள் குடிநீர் தேவை என்பது 1,200 மில்லியன் லிட்டர்கள் என கூறப்படுகிறது. சென்னை மக்களுக்கு தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, மாதந்தோறும் குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இந்த குறிப்பிட்ட நாட்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் பிரதான குழாயை மற்றொரு குழாயோடு இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், மூன்று நாட்களுக்கு 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
Also Read : கோவை மக்கள் நிம்மதி.. 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடல்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
அதன்படி, சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரையுள்ள 7 மண்டலங்களில் 2025 ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய மண்டலங்களில் மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறவிக்கப்பட்டுள்ளது.
Also Read : சென்னை மக்களே அலர்ட்… 17 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?
இதுகுறித்து மெட்ரோ வாட்டர் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில்,
குடிநீர் விநியோகம் இல்லாத பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வரும் பகுதிகளுக்கும் டேங்கர்கள் மற்றும் தெரு குழாய்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரச தேவை ஏற்பட்டால், மெட்ரோ வாட்டர் இணையத்தில் பதிவு செய்து டேங்கர்கள் மூலம் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, தேவைகேற்ப சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.