செஞ்சிக் கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்.. உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

Gingee Fort Named UNESCO World Heritage Site : செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள், விழுப்புரம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சிக் கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்..  உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ

செஞ்சிக் கோட்டை

Updated On: 

12 Jul 2025 16:40 PM

விழுப்புரம், ஜூலை 12 : விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக உள்ள செஞ்சிக்கோட்டை (Gingee Fort) உலக பாரம்பரிய சின்னமாக (World Heritage Site) யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளது. உலக அளவில் புராதனமான இடங்களையும் யுனெஸ்கோ என்ற அமைப்பு கண்டறிந்து ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. இதில் தமிழகத்தில் பல்வேறு இடங்கள் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது செஞ்சிக்கோட்டையும் இணைந்துள்ளது சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் 47வது அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 மராத்திய ராணுவ நிலப்பரப்பு என்ற தலைப்பில் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.  மராட்டியர்கள் கி.பி 1678ஆம் ஆண்டு முதல் 1697ஆம் ஆண்டு வரை செஞ்சிக் கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ததால் பிரதான பட்டியிலில் இந்த கோட்டை இடம் பெற்றுள்ளது.  இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டிற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் பெருமைமிக்க தருணம்.

Also Read : விவசாயிகளுக்கு நற்செய்தி… பாசன வேளாண்மை மேம்பாட்டிற்கு ரூ.305 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

செஞ்சிக் கோட்டைக்கு கிடைத்த அங்கீகாரம்


இந்த அங்கீகாரம் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனளிக்கும். கல்வி ரீதியாக, ஒரு உந்துதல் இருக்கும். இது கல்வி உலகில் செஞ்சியைப் பற்றி மேலும் அறிய உதவும். எதிர்காலத்தில், மக்கள் மாமல்லபுரத்துடன் சேர்ந்து செஞ்சிக்கு சுற்றுலா சென்று பார்வையிட திட்டமிடுவார்கள். கொரோனா தொற்றுக்கு பிறகு, சுற்றுலாப் பயணிகளின் வருகை செஞ்சியில் பாதிக்கப்பட்டது.

Also Read : தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.. இருப்பினும் இதனை பின்பற்ற வேண்டு – பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

அது இன்னும் அதிகரிக்கவில்லை. இந்த அங்கீகாரம் இப்போது ஒரு திருப்புமுனை தருணமாகும். இது மாவட்டத்தின் சுற்றுலா தளத்தை மேலும் மேம்படுத்தும்” என கூறினார். முன்னதாக, தமிழகத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ஜெயங்கொண்டான் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரத்தில் சிற்பங்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலை ரயில், கும்பகோணம் ஜராதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.