சிபிஐ விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் – விஜய் கோரிக்கை – காரணம் என்ன?
TVK Vijay : கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணையை சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு விஜய் கடிகம் எழுதியுள்ளார். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விஜய்
சென்னை, மார்ச் 16 : கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் விசாரணையை சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிக்கு விஜய் கடிகம் எழுதியுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமி புரத்தில் நடைபெற்ற பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கரூரில் பரப்புரை நடைபெற்ற இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர். மேலும் விஜய் பயணித்த வாகனமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.
சிபிஐ விசாரணையை சென்னையில் நடத்த விஜய் கோரிக்கை
இதன் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய்யிடம் ஏற்கனவே டெல்லியில் வைத்து 2 முறை சிபிஐ விசாரணை நடைபெற்றது. இதனயைடுத்து 3 வது முறையாக மார்ச் 15, 2026 அன்று விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 7 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு விஜய் தனது வின் ஷீல்டில் நின்றபடி கைகாட்டியபடி மேலே வந்தது அவரது கட்சியினரிடையே கவனம் ஈர்த்தது.
இதையும் படிக்க : R. Gandhi Tamil Nadu Election: திமுகவின் சாதனை செம்மல்.. ராணிப்பேட்டையின் வெற்றி முகம்.. ஆர். காந்திக்கு மீண்டும் வசமாகுமா தொகுதி!
இதனையடுத்து மீண்டும் விஜய் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அல்லது தமிழகத்தில் சிபிஐ விசாரணையை நடத்த வேண்டும் என சிபிஐக்கும் இந்த வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் விஜய் இது பற்றி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலைில் கட்சி சார்பாக தனக்கு பணிகள் இருப்பதால் சிபிஐ விசராணையை சென்னை அல்லது தமிழ்நாட்டில் வேறு பகுதிகளில் நடத்த வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கை
வதந்திகளை நம்ப வேண்டாம்!
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன்…
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) March 16, 2026
இதையும் படிக்க : K. Pitchandi Tamil Nadu Election: கருணாநிதியால் அடையாளம் காண்பிக்கப்பட்டவர்… 6 முறை வெற்றி வாகை சூடியவர்.. மீண்டும் தடம் பதிப்பாரா கு.பிச்சாண்டி!
தவெக தலைவர் விஜய்யிடம் ஒரு பக்கம் பாஜக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை தவெக நிர்வாகிகள் மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெளியான சிடிஆர் நிர்மல்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், வதந்திகளை நம்ப வேண்டாம். சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக அதிமுக, அல்லது சசிகலா, டாக்டர் ராமதாஸ் ஆகியோரை தவெகவுடன் கூட்ணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று குறிப்பிட்டுள்ளார்.