Rain Alert: நாளை இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

Very heavy rain: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Rain Alert: நாளை இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

மிக கனமழை எச்சரிக்கை

Updated On: 

16 Nov 2025 14:50 PM

 IST

சென்னை, நவம்பர் 16: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கச் சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.15) இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு – வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; ஒருவர் பலி..15 பேரின் நிலை என்ன?

இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இதன் காரணமாக, இன்று (நவ.16) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.

நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: நவ. 24 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய அப்டேட்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.