இளைஞர்களை திசை திருப்பவே சீமானின் இந்த கோமாளித்தனம் – விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு..

Vanni Arasu On Seeman: சீமான் இதுவரை சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக போராட்டமோ, மாநாடு நடத்தியதில்லை. ஆனால் ஆணவ படுகொலைகள் ஆதரித்தும் கொடி பெருமை ஆதரித்தும் பிதற்றி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாலர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை திசை திருப்பவே சீமானின் இந்த கோமாளித்தனம் - விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு..

வன்னி அரசு - சீமான்

Published: 

19 Jul 2025 07:59 AM

சென்னை, ஜூலை 19, 2025: சாதிய மதவாத இந்துத்துவா இந்திய தேசியத்துக்கு எதிராக இளைஞர்கள் போராடுவதை திசை திருப்பவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோமாளித்தனங்களை நடத்தி வருவதை புரிந்து கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை விராதனூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் 2000க்கும் மேற்பட்ட ஆடு மாடுகளுக்கு முன்னிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அதேபோல அந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது., முக்கியமாக ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கேட்பதாக வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து மரங்களுக்கான மாநாடு நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

இளைஞர்களை திசை திருப்பவே இந்த கோமாளித்தனம் – வன்னி அரசு:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகாலமாக தற்சார்பு வாழ்க்கை முறை குறித்து கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார். அதனை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டங்களானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு சாதிய மதவாத இந்திய தேசத்துக்கு எதிராக இளைஞர்கள் போராடுவதை திசை திருப்பவே இது போன்ற கோமாளித்தனங்களை அரங்கேற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திமுகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..

இது தொடர்பான அவரது சமூக வலைதள பதிவில், “ சீமான் இதுவரை சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக போராட்டமோ, மாநாடு நடத்தியதில்லை. ஆனால் ஆணவ படுகொலைகள் ஆதரித்தும் கொடி பெருமை ஆதரித்தும் பிதற்றி வருகிறார்.

பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தோ அல்லது பெண்களின் உரிமை குறித்தோ இதுவரை மாநாடோ போராட்டமோ நடத்தியதில்லை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். சோசியலிசம் செக்யூலரிசம் போன்றவற்றை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து எடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக இதுவரை போராட்டமும் மாநாடோ நடத்தியதில்லை.

மேலும் படிக்க: இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!

இது தான் தமிழ் தேசியமா?

ஆனால் ஆடு மாடுகளுக்காகவும் மரங்களுக்காகவும் போராட்டம் நடத்துகிறார். இப்படியான கோமாளித்தனங்களுக்கு பெயர்தான் தமிழ் தேசியமா. மக்களுக்கான பிரச்சினைகளை திசைத்திருப்ப ஆடு மாடுகளுக்காக போராடுவது தான் தமிழ் தேசியமா. சாதிய மதவாத இந்துத்துவா இந்திய தேசத்திற்கு எதிராக இளைஞர்கள் போராடுவதை திசை திருப்பவே இப்படியான செயல்களை சீமான் செய்து வருகிறார் என்பதை இளைஞர்கள் எச்சரிக்கையுடன் புரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்