சென்னையில் ஹெலிகாப்டரில் செல்ல அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுமதி மறுப்பு – என்ன நடந்தது?

Gadkari Denied Helicopter Permission : மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்த நிலையில் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஹெலிகாப்டரில் செல்ல அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுமதி மறுப்பு -  என்ன நடந்தது?

நிதின் கட்கரி

Published: 

13 Oct 2025 21:32 PM

 IST

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அக்டோபர் 13, 2025 அன்று பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக புதுச்சேரி வந்தார். இந்த நிலையில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிறகு சென்னை மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். இந்த நிலையில் அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் (Helicopter) மூலம் மூலம் விமான நிலையம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் சாலை மார்க்கமாக அவர் விமான நிலையம் சென்றடைந்தார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஹெலிகாப்டரில் செல்ல நிதின் கட்கரிக்கு அனுமதி மறுப்பு

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அக்டோபர் 13, 2025 அன்று புதுச்சேரியில் அரசு திட்டங்களை துவங்கி வைத்தார். பின்னர் திட்டமிட்டபடி அங்கிருந்து புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மறைமலைநகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து நாக்பூர் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் விமானம் தாமதமாக புறப்பட்டதால், அவர் மாலை 4.15 மணிக்கு தான் அவர் சென்னைக்கே வந்தார். பல்கலைக்கழகத்திலும் திட்டமிடப்பட்ட நேரத்தை விட தாமதமாகவே விழா துவங்கியது.

இதையும் படிக்க : தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை

மாலை 6 மணிக்கு மேல் ஹெலிகாப்டர் பறக்கத் தடை

இந்த தாமதம் காரணமாக ஹெலிகாப்டரில் மறைமலநகரிலிருந்து மீண்டும் விமான நிலையம் திரும்ப மாலை 6 மணிக்கு மேலாகிவிட்டது. ஆனால் சிவில் விமான பாதுகாப்பு விதிகளின்படி, பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்டர்களைத் தவிர மற்ற ஹெலிகாப்டர்கள் மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் சென்னையின் விமானப்போக்குவர்தது கட்டுப்பாட்டு மையம் நிதின் கட்கரியின் ஹெலிகாப்டர் பற்க்க தடைவிதித்தது.

மேலும், நிதின் கட்கரியின் பாதுகாப்பு குழுவும் சாலை வழியாக பயணிப்பதே பாதுகாப்பானது என ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிதின் கட்கரி பல்கலைக்கழகத்தில் இருந்து மாலை 6 மணி அளவில் காரில் புறப்பட்டு சுமார் மாலை 6.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் தனி விமானம் மூலம் மாலை 7 மணிக்கு நாக்பூர் புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!

இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, மாலை 6 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டர்கள் பறக்க  அனுமதிக்கப்படுவதில்லை.  இது பாதுகாப்பு காரணங்களுக்காக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மட்டுமல்ல அரசியல் தலைவர்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்றனர்.

.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..