ஜூன் 8ல் மதுரை வரும் அமித் ஷா.. முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு.. என்ன மேட்டர்?

Home Minister Amit Shah Madurai Visit : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2025 ஜூன் 8ஆம் தேதி மதுரை வர உள்ளதாக தெரிகிறது. மதுரை வரும் அமித்ஷா, ஒத்தக்கடையில் நடைபெறும் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். மேலும், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 8ல் மதுரை வரும் அமித் ஷா.. முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு.. என்ன மேட்டர்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Updated On: 

05 Jun 2025 10:28 AM

 IST

சென்னை, ஜூன் 05 :  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit shah Madurai visit) 2025 ஜூன் 8ஆம் தேதி மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மதுரை வரும் அமித்ஷா, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணி குறித்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு (2026 Tamil nadu assembly election) இன்னும் 10 மாதங்களே உள்ளதால், அனைத்து கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அண்மையில், மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்தார். மேலும், பாஜக மாநில தலைவைராக நயினார் நாகேந்திரனை தேர்வு செய்தார். இப்படி பல அதிரடி நடவடிக்கை கூட்டணியில் நடந்தது.

ஜூன் 8ல் மதுரை வரும் அமித் ஷா

இப்படியான சூழலில், மீண்டும் ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

மேலும், தென் மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. கட்சியை பலப்படுத்துவது ஆலோசிக்கப்படலாம். மேலும், ஓ.பன்னீல்செல்வம், டிடிவி தினகரனை அமித் ஷா சந்திக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த இருமுறை தமிழகத்தில் வந்த அமித் ஷா, ஓபிஎஸ் மற்றும் தினகரனை சந்திக்கவில்லை. எனவே, இந்த முறை மதுரையில் இருவரையும் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  போட்டியிடும் இடங்கள், வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

2026 தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள்

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் 10 மாதங்களே உளளது. எனவே, இதற்காக ஆயுதப்பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் பாஜக அதிமுக கூட்டணி அமைந்தது.

அதே நேரத்தில், களத்தில் உள்ள நான் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமா அல்லது தனியாக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும்,  தமிழக வெற்றிக் கழகத்தை தன் பக்கம் இழுக்க அதிமுக முயற்சித்து வருவதாக  அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர், நயினார் நாகேந்திரனும் மறைமுக அழைப்பும் விடுத்திருந்தனர். இருப்பினும்,  முதல்வர் வேட்பாளர் பதவியில் விஜய் உறுதியாக இருப்பதால் இழுபறியில் இருப்பதாக தெரிகிறது.  விஜயின் நிபந்தனைகளுக்கு அதிமுக உடன்படாத பட்சத்தில்,  தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடும் என சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
வெளியான விக்ரமின் சீயான் 63 பட ஷூட்டிங் அப்டேட் !
கிளீன் ஷேவ் லுக்கில் மிரட்டும் யாஷ் - வைரலாகும் டாக்ஸிக் பட புதிய போஸ்டர்
மணிரத்னம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய் சேதுபதி!
ஜூன் மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன்?