Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thirumavalavan: 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும்.. உறுதியாக சொன்ன திருமாவளவன்!

DMK-VCK Alliance: திமுக-விசிக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் கணித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியின் சிறப்பான ஆட்சியையும், மக்கள் ஆதரவையும் அவர் சுட்டிக்காட்டினார். பாமக உட்கட்சி விவகாரம் மற்றும் அதிமுக-தேமுதிக மாநிலங்களவை இடஒதுக்கீடு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

Thirumavalavan: 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும்.. உறுதியாக சொன்ன திருமாவளவன்!
திருமாவளவன்Image Source: PTI and Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 01 Jun 2025 19:24 PM

புதுச்சேரி, ஜூன் 1: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்துடன், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Siruthai Katchi) கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை சந்தித்து அமோக வெற்றியை பெற்றது. தொடர்ந்து, இந்த விசிக மற்றும் திமுக கூட்டணி வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க இருக்கிறது. இந்தநிலையில், 2026 தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என திருமாவளவன் (Thirumavalavan) தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பாமக உட்கட்சி விவகாரம், அதிமுக – தேமுதிக மாநிலங்களவை தொகுதி விவகாரம் குறித்தும் பேசினார்.

திமுக – விசிக கூட்டணி:

புதுச்சேரியில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், “நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி வருகிறது. இது அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெறுகின்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்து, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாடு மக்களின் பேராதவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ” என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பேசிய கருத்து:

தொடர்ந்து செய்தியாளர்கள் பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், “அது பாமகவின் உட்கட்சி விவகாரம், அதுகுறித்து கருத்து தெரிவிக்க எதுவுமில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பாமகவிற்கு எந்த போட்டியும் இல்லை. அதனால், வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் களம் வேறு, எங்கள் பயணம் வேறு. நாங்கள் என்றுமே பாட்டாளி மக்கள் கட்சியை போட்டி கட்சியாக நினைத்தது இல்லை.” என்று தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசனின் மாநிலங்களவை சீட் குறித்து பேசிய திருமாவளவன், “நடிகர் கமல்ஹாசனுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், திமுக அவருக்கென்று ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது. மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் ஒரு அங்கம். ஆனால், அதிமுக அதுபோன்ற வாக்குறுதியை தேமுதிகவிற்கு கொடுத்ததாக கூறுகிறார்கள். அதிமுக அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை, அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை ஒதுக்கவில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாகதான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!
கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!...
விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!
விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!...
போலி கஸ்டமர் கேர்: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி..!
போலி கஸ்டமர் கேர்: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி..!...
இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு- கார்த்தி!
இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு- கார்த்தி!...
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. நடந்தது என்ன?
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. நடந்தது என்ன?...
வாழ்நாள் சிறப்பு பயணம்- இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!
வாழ்நாள் சிறப்பு பயணம்- இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!...
மாதாந்திர ரயில் டிக்கெட் பெற செயலி கட்டாயம்..? பயணிகள் அவதி
மாதாந்திர ரயில் டிக்கெட் பெற செயலி கட்டாயம்..? பயணிகள் அவதி...
ஐபிஎல் பைனலில் மோதும் RCB vs PBKS! எந்த அணி இதுவரை ஆதிக்கம்?
ஐபிஎல் பைனலில் மோதும் RCB vs PBKS! எந்த அணி இதுவரை ஆதிக்கம்?...
வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை.. பொள்ளாச்சியில் ஷாக்
வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை.. பொள்ளாச்சியில் ஷாக்...
முதல் கோப்பை யாருக்கு..? மோதும் RCB-PBKS! போட்டியை எங்கு காணலாம்?
முதல் கோப்பை யாருக்கு..? மோதும் RCB-PBKS! போட்டியை எங்கு காணலாம்?...
உள்ளம் கேட்குமே படத்தால எனக்கு லைலாவ பிடிக்காமயே போயிடுச்சு...
உள்ளம் கேட்குமே படத்தால எனக்கு லைலாவ பிடிக்காமயே போயிடுச்சு......