விஜய்யின் பொதுக்கூட்டம் எப்போ தெரியுமா? அனுமதி கேட்டு தவெக சார்பில் விண்ணப்பம்
TVK Vijay's Public Meeting : காஞ்சிபுரத்தை தொடர்ந்து, தமிழகத்தில் விஜய் எங்கு மக்கள் சந்திப்பை நடத்தப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய தகவலின் படி, விஜய் புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9, 2025 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக விஜய்
சென்னை டிசம்பர் 4 : புதுச்சேரியில் (Puducherry) விஜயின் ரோட் ஷோவிற்கு அனுமதி கிடைக்காததால் டிசம்பர் 5, 2025 அன்று விஜய் மேற்கொள்ளவிருந்த அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசியும் பாதுகாப்பு காரணஙகளைக் காட்டி அனுமதி வழங்கப்படாத நிலையில், பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு சில நாட்களில் பொதுக்கூட்டம் நடத்த முன்னேற்பாடுகள் செய்ய முடியாது என்பதால் விஜய்யின் (Vijay) வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எப்போது?
இந்த நிலையில் காஞ்சிபுரத்தை தொடர்ந்து, தமிழகத்தில் விஜய் எங்கு மக்கள் சந்திப்பை நடத்தப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய தகவலின் படி, விஜய் புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9, 2025 அன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கிறாராம். இதனையடுத்து காவல்துறை ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டால் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் தான் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
கடைசியாக செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடைபெற்ற பரப்புரையில் விஜய் கலந்து கொண்ட நிலையில், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தான் விறுவிறுப்பாக இயங்கி வந்த விஜய்யின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
விஜய்யை சந்திக்க காத்திருக்கும் தொண்டர்கள்
சம்பவம் நடந்து ஒரு மாதமாக வெளியே வராத நிலையில், சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதி வெல்லும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதன் பிறகு மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், கடைசியாக காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள அரங்கில் மக்களை சந்தித்தார்.
இதையும் படிக்க : புதுச்சேரி பயணத்தை ரத்து செய்த விஜய் – காரணம் இதுதான் – பரபரப்பு தகவல்
இந்த நிலையில் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காரணம் காட்டி அவரது ரோடு ஷோவிற்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்துள்ளது. இது அவரது கட்சி தொண்டர்களிடையே கவலையை அதிகரித்தது. இந்த நிலையில் அவர் புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி அனுமதி கேட்டு மனு அளித்த நிலையில் அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே டிசம்பர் 5, 2025 அன்று காவல்துறை பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்த நிலையில், இந்த முறையும் அனுமதி கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.