Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாமகவை அன்புமணி உரிமை கோர முடியாது…ஜி.கே.மணி!

PMK internal issue: பாட்டாளி மக்கள் கட்சியின் உரிமை கோரல் தொடர்பான வழக்கில் ராமதாசுக்கு சாதகமான உத்தரவு வந்துள்ளதாகவும், இனி பாமக, மாம்பழம் சின்னத்தை அன்புமணி உரிமை கோர முடியாது என்றும் அந்தக் கட்சியின் கெளரவத் தலைவர் ஜி. கே. மணி தெரிவித்தார்.

பாமகவை அன்புமணி உரிமை கோர முடியாது…ஜி.கே.மணி!
கட்சி திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 04 Dec 2025 13:58 PM IST

பாமகவின் உரிமை கோரல் விவகாரத்தில் அன்புமணியை தலைவராக அறிவித்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பாமக சார்பில் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 4) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை தொடர்ந்து கட்சியின் கௌரவத் தலைவர் ஜி. கே. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் படுகொலை செய்யக்கூடாது. மருத்துவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் துணை போகக்கூடாது. பாமக உரிமை கோரல் விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வழக்கில் ராமதாஸுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு கிடைத்த வெற்றி

2022 முதல் 2025 வரை மட்டுமே அன்புமணிக்கு பதவிக்காலம் ஆகும். ஆனால் 2023 முதல் அவரது பதவிக்காலம் தொடங்குவதாக போலியான ஆவணத்தை தயார் செய்து தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத் துணையோடு 2026 தலைவர் பதவி இருப்பதாக கூறியுள்ளனர். எங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம் அன்புமணியின் ஆவணங்கள் செல்லாது எனவும், அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் தான் அவரை தலைவர் என்று கூறியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இது ராமதாசுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கு…இன்று தீர்ப்பு!

பாமக தலைவர் என்று அன்புமணி கூற முடியாது

இதனால், பாமகவின் தலைவர் அன்புமணி என கூற முடியாது. பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மாம்பழம் சின்னம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதுவும் செல்லாதது ஆகிவிட்டது. எனவே, பாமகவுக்கு யார் தலைவர் என்பதை உறுதி செய்ய உரிமைகள் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் தான் ஜனநாயகத்தை நிர்வகிக்கிறது. அவ்வாறு இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடக்கக் கூடாது.

கட்சி திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம்

முன்பு வாக்குத்திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கட்சி திருட்டிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ் 46 ஆண்டுகாலம் உழைத்து வளர்த்த பாமக அவரிடம் இருந்து திருடி அன்பு மனைவியிடம் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இழைத்த அநீதியை இந்தியாவில் வேற எந்த கட்சிக்கும் தேர்தல் ஆணையம் இழைக்கக் கூடாது. ஒருதலை பட்சமாக செயல்படுவதை தவிர்த்து விட்டு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பாமக உரிமை கோரல் வழக்கு…அன்புமணிக்கு வந்த குட் நியூஸ்!