கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..

TVK Protest: தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. த.வெ.க கண்டன ஆர்ப்பாட்டம்.. முழு விவரம் உள்ளே..

கோப்பு புகைப்படம்

Published: 

04 Nov 2025 06:40 AM

 IST

கோவை, நவம்பர் 4, 2025: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கம் சந்திப்பில் இன்று, அதாவது நவம்பர் 4, 2025 அன்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்:

கோவை மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில், ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் மூவர், அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக வெளியே எடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, அந்த இடத்திலிருந்து இளைஞர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர், அந்த பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் படிக்க: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்.. தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..

அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்ற இளைஞர், அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகிலிருந்த பகுதியில் அந்தப் பெண் நிர்வாணமாக கிடந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் மூலமாகவும், கடையது நிபுணர்கள் மூலமாகவும் மூவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் ஏழு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

முதல்வர் துயில் களைவது எப்போது ? விஜய் கேள்வி:


தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில், “கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் சீண்டலுக்கும், துன்புறுத்தலுக்கும், வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி தினகரன் கொடுமையை இன்னும் மறக்கவில்லை;

அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டு பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேருகிறது — தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக கண்டன ஆர்ப்பாட்டம்:

இது ஒரு பக்கம் இருக்க, கோவை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் இன்று, அதாவது நவம்பர் 4, 2025 அன்று, பிற்பகல் 12 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கம் சந்திப்பு, பந்தய சாலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.