மேஜையை தூக்கிய முதல்வர் விஜய்.. பதறிப்போன அதிகாரிகள்.. விழா மேடையில் நடந்த சம்பவம்!

TVK Leader Vijay Lifts Table | தமிழகத்தின் 17வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், பதவி ஏற்ற மேடையில் இருந்த மேஜையை அகற்றும்போது முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உதவி செய்தது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேஜையை தூக்கிய முதல்வர் விஜய்.. பதறிப்போன அதிகாரிகள்.. விழா மேடையில் நடந்த சம்பவம்!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

11 May 2026 01:24 AM

 IST

சென்னை, மே 10 : தமிழகத்தில் 17வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். இந்த நிலையில், பதவி ஏற்பு மேடையில் போடப்பட்டு இருந்த மேசையை அங்கிருந்தவர்கள் அகற்றிய நிலையில், அவர்களுடன் இணைந்து முதலமைச்சரும் மேசையை தூக்கியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் 17வது முதலமைச்சராக பதவியேற்ற சி.ஜோசப் விஜய்

2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருந்தது. அதாவது, தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்த நிலையில், ஆட்சி அமைக்க கூடுதலாக 10 இடங்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தவெக தள்ளப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தது. அதுமட்டுமன்றி விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு தருவதாக அறிவித்தன.

இதையும் படிங்க : பொது இடங்களில் LED திரைகள்.. தயார் நிலையில் கான்வாய்.. விஜய் பதவியேற்பு சிறப்பு ஏற்பாடுகள் விவரம்!

விஜய் செய்த செயல் – மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்ற நிலையில், அனைவரும் புகைப்படம் எடுப்பதற்காக மேடையில் இருந்த மேஜை எடுக்கப்பட்டது. அப்போது, முதலமைச்சர் விஜய், மேஜை தூக்கியவர்களுக்கு உதவி செய்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த்த அனைவரும் உடனே வந்த அவரிடம் இருந்து மேஜையை கைமாற்றினர். பின்னர் அனைவரும் செல்ஃபி புகைப்படம் எடுக்கொண்டனர்.

இதையும் படிங்க : CM Vijay Swearing-in Ceremony : விசிக உள்ளிட்ட 5 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் விஜய்.. இன்று பதவி ஏற்கிறார்!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அவரின் எளிமையான செயல் குறித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி