என்டிஏ கூட்டணியில் தவெக?.. டெல்லியில் பேச்சுவார்த்தை?.. நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!!

Vijay's TVK in the NDA Alliance: கூட்டணி குறித்த பரிசீலனையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தான் தீவிரமாக விமர்சித்த பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டிற்கு முரணாக இருக்குமோ என்ற அச்சமும் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே உள்ளது.

என்டிஏ கூட்டணியில் தவெக?.. டெல்லியில் பேச்சுவார்த்தை?.. நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!!

நயினார் நாகேந்திரன்

Published: 

14 Mar 2026 13:38 PM

 IST

சென்னை, மார்ச் 14: தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த அணியில் இணையும் என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, என்டிஏ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அணியில் தவெக இணைவதற்கான முயற்சிகள் நடப்பதாக கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. கடந்த ஒரு வாரமாகவே, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தவெக-வை இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கசிந்தன. இருப்பினும், இது தொடர்பாக தவெக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய எந்தத் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?

தேஜகூ கூட்டணியில் தவெக?

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா? பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காகவே விஜய் டெல்லி செல்கிறார். விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கூட்டணிக்கு விஜய் வர விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

தவெக மா.செ கூட்டத்தில் ஆலோசனை:

கூட்டணி குறித்த விவாதங்கள் எழுவதற்கு முக்கியக் காரணமாகத் தவெக-வின் அகச் சூழலே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தவெக-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வரும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களைக் கண்டறிவதிலும், அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை (சுமார் 5 கோடி ரூபாய் வரை தேவைப்படும் சூழலில்) திரட்டுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டுக்கு முரண்:

தனித்துப் போட்டியிடும் முடிவில் இருந்த தவெக, நிதி மற்றும் வேட்பாளர் தேர்வில் உள்ள சவால்களால், கூட்டணி குறித்த பரிசீலனையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தான் தீவிரமாக விமர்சித்த பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, விஜய்யின் கொள்கை நிலைப்பாட்டிற்கு முரணாக இருக்குமோ என்ற அச்சமும் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே உள்ளது.

அரசியல் களத்தின் தற்போதைய நிலை:

திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக மற்றும் சமீபத்தில் இணைந்த தேமுதிக ஆகிய கட்சிகள் வலுவாக உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலின் வெற்றியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிம்பமும் தங்களுக்குக் கை கொடுக்கும் என இந்தக் கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது.

இதையும் படிக்க: ‘கேஸ்’க்கு தனி ரேட்.. ஹோட்டல்களில் உயர்ந்த உணவுகளின் விலை.. ஷாக் கொடுக்கும் சென்னை நிலவரம்!

அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் அடங்கிய என்டிஏ கூட்டணி, ஆட்சியில் இருக்கும் திமுக-வுக்கு எதிராக ஒரு வலுவான மாற்று அணியை உருவாக்க முயன்று வருகிறது. இந்த அணியில் தவெக-வை இணைப்பதன் மூலம் திமுக-வின் வாக்கு வங்கியைப் பிரிக்க முடியும் என்று பாஜக தரப்பு கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.

Follow Us
Related Stories
திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது – கருத்துக்கணிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து..
வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை..
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
மே 2-ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..