தூத்துக்குடி வழக்கில் திடீர் திருப்பம்.. மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை.. காவல்துறை தகவல்..

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, இயற்கை உபாதைகளை கழிக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கவலை அடைந்து அவரை தேடி சென்றுள்ளனர். ஆனால் அந்த பகுதியில் மாணவி காணப்படவில்லை.

தூத்துக்குடி வழக்கில் திடீர் திருப்பம்..  மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை.. காவல்துறை தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

13 Mar 2026 06:59 AM

 IST

தூத்துக்குடி, மார்ச் 13, 2026: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை என்றும், அவரது உடல் முழுமையாக கிடைத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, இயற்கை உபாதைகளை கழிக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கவலை அடைந்து அவரை தேடி சென்றுள்ளனர். ஆனால் அந்த பகுதியில் மாணவி காணப்படவில்லை.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், உறவினர்கள் தரப்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

6 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் தீவிரம்:

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தற்போது வரை ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: தூத்துக்குடி மாணவி வன்கொடுமை வழக்கு… மகாநதி பட வசனத்தை பகிர்ந்து கமல்ஹாசன் விமர்சனம்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எங்கே?

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கே தயக்கம் காட்டும் நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: “234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி”.. மற்றவா்களை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.. செங்கோட்டையன்

மாணவியின் உடன் துண்டு துண்டாக வெட்டப்படவில்லை:

இந்த நிலையில், சிறுமி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்படவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து சிறுமியின் சடலம் முழுமையாக கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடற்கூறு ஆய்வு மற்றும் அறிவியல் விசாரணை அறிக்கை கிடைத்த பின் பாலியல் குற்றம் நடந்ததா என்பது உறுதி செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உண்மைக்கு புறம்பான தகவல்களை தேவையில்லாமல் வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் அல்லது பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us
Related Stories
இன்று கட்சி பெயரை அறிவிக்கும் சசிகலா? வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை..
தமிழகத்தில் முதல்முறையாக.. கேஸ் சிலிண்டர் பதுக்கியவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..
தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் ஹோட்டல் உணவுகளின் விலை திடீர் உயர்வு.. மக்கள் அவதி..
“234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி”.. மற்றவா்களை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டாா்கள்.. செங்கோட்டையன்
வேலூர், மதுரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும்?
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..