வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா…இன்றுடன் நிறைவடைகிறது கால அவகாசம்!

Tamil Nadu Voter List: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, பெயர் சேர்க்காத வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூத் லெவல் அதிகாரியிடம் சமரப்பிக்கலாம். இதைத் தொடர்ந்து வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா...இன்றுடன் நிறைவடைகிறது கால அவகாசம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாள்

Published: 

18 Jan 2026 07:25 AM

 IST

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் ( எஸ். ஐ. ஆர்) தொடங்கி நடைபெற்றது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. இதில், பீகாரில் வாக்கு திருட்டு நடைபெற்றது போல, தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், எதிர்க் கட்சிகளுக்கு சாதகமாக உள்ள வாக்குகள் நீக்கப்படும் அச்சம் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது. அதன்படி, பல்வேறு எதிர்ப்புகள், குளறுபடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தது. இந்த பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், இந்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.

97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அதாவது, இறந்தவர்கள், வேறு முகவரிக்கு இடம் மாறியவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் என 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி வரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பதற்காக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், ஜனவரி 18- ஆம் தேதி வரை தங்களது பெயரை சேர்ப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசமானது இன்று ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 18) முடிவடைகிறது.

மேலும் படிக்க: பொங்கல் விடுமுறை முடிந்து பயணிகள் ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் – விவரம் இதோ

வாக்காளர் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 18 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். இதே போல, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கோரி 32 ஆயிரத்து 288 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்காத வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பூத் லெவல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.

பிப்ரவரி 17- இல் வாக்காளர் இறுதி பட்டியல்

இந்த விண்ணப்பங்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படும். அதன் பின்னர் அடுத்த மாதம் பிப்ரவரி 17- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வதற்காக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது, இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் 3 சுங்கச் சாவடிகளில் வருகிறது புதிய தொழில்நுட்பம்…இனி வாகனங்கள் விரைந்து செல்லலாம்!

Related Stories
திமுகவை தவிர்த்து தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா காங்கிரஸ்? டெல்லி கூட்டத்தில் நடந்தது என்ன!
தை அமாவாசை….ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்த பொது மக்கள்…கோயில்களில் சிறப்பு வழிபாடு!
பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை…தொகுதி பங்கீடு-கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு!
“ஆண்களுக்கு இலவசப் பேருந்து யாராவது கேட்டார்களா?”.. அதிமுக வாக்குறுதிகளை சரமாரியாக விமர்சித்த சீமான்!!
சென்னையில் 3 சுங்கச் சாவடிகளில் வருகிறது புதிய தொழில்நுட்பம்…இனி வாகனங்கள் விரைந்து செல்லலாம்!
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. விடைபெறும் வடகிழக்கு பருவமழை.. வானிலை அப்டேட் இதோ..
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!