உதவுவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி..
Tiruvannamalai Crime: திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திரா பெண்ணை, காவலர்கள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புகாரின் அடிப்படையில் அக்டோபர் 1, 2025 அதிகாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் சுரேஷ் மற்றும் சுந்தர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை, அக்டோபர் 1, 2025: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாமி தரிசனத்திற்காக வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை காவலர்கள் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள். அண்மைக்காலமாக திருவண்ணாமலைக்கு தமிழகத்திலிருந்துமல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மக்கள் அதிக அளவில் வருகை தந்து வருகின்றனர்.
சாமி தரிசனத்திற்காக ஆந்திராவில் இருந்து வந்த தாய் மகள்:
அந்த வகையில், ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சாமி தரிசனத்திற்காக தாய் மற்றும் மகள் இருவரும் வந்துள்ளனர். ஆந்திர மாநிலத்திலிருந்து வாழைத்தார் ஏற்றி வந்த மினிவேனில் லிப்ட் கேட்டு இருவரும் வந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை அடைந்த அந்த மினிவேன், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இரண்டு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. அப்போது ஓட்டுநர் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நிற்க, வாகனத்தில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரையும் இறங்குமாறு காவலர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு.. தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு..
பெண்ணை பாலியம் வன்கொடுமை செய்த காவலர்கள்:
பின்னர் அவர்கள் இருவரையும் “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்று கூறி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். ஆனால் அவர்கள் திருவண்ணாமலை நோக்கி செல்லாமல், விழுப்புரம் சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அழைத்துச் சென்று, தாயை அருகில் இருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு, மகளை புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது சுரேஷ் மற்றும் சுந்தர் இருவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் எதுவும் நடக்காதது போல் அந்த பெண்ணை அங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: ’யார் சொல்லியும் விஜய் கேட்கல’ கரூர் சம்பவத்தில் உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!
அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் போராடி சாலையில் செல்லுபவர்களிடம் உதவி கேட்டு, அருகில் இருந்த செங்கல் சூளைக்குச் சென்றடைந்தார். தாயும் அதே செங்கல் சூளைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஊர் மக்கள் என்ன நடந்தது என்று கேட்டறிந்து, உடனடியாக அவசர ஊர்தியை வரவழைத்து, அருகிலிருந்த திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலர்கள் இருவரும் கைது:
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் கழக காவல் நிலைய ஆய்வாளரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில், அக்டோபர் 1, 2025 அதிகாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் சுரேஷ் மற்றும் சுந்தர் ஆகியோரை கைது செய்துள்ளனர். உதவி செய்வதாக கூறி காவலர்களே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.