திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கு.. 2 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..
Tiruppur SSI Shanmugavel Murder: திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் அப்பா மகன்கள் சண்டையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் மணிகண்டன் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
திருப்பூர், ஆகஸ்ட் 8, 2025: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில் அப்பா மகன் உள்ளிட்ட மூன்று பேர் மோதலில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து விசாரணை நடத்துவதற்காக அங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்கே சென்றிருந்தார். அப்போது தகராறு நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்திய போது திடீரென அப்பா மகன் மூன்று பேரும் இணைந்து அறிவாலால் எஸ்.ஐ சண்முகவேலை சரமாரியாக வெட்டி தலை துண்டாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலையில் சம்பந்தப்பட்ட தங்கப்பாண்டி மற்றும் மூர்த்தி ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கு பின்னணி என்ன?
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தோட்டத்தில் அப்பா மூர்த்தி, மற்றும் மகன்கள் தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் அங்கேயே தங்கி பணியாற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 6 2025 அன்று மதுபோதையில் மூன்று பேரும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கைகளைப்பாக மாறி அறிவாளால் துரத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: தந்தையை திருமணம் செய்த பெண்?.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!
இது தொடர்பாக தகவல் அறிந்த ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக என்ன நடந்தது, ஏன் இந்த சண்டை என கேட்கவே, மூன்று பேரும் சேர்ந்து எஸ்.ஐ சண்முகவேலை கடுமையாக திட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கையில் இருக்கக்கூடிய அறிவாளால் எஸ்.ஐ சண்முக வேலை சரமாரியாக வெட்டி தலை துண்டாக்கி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் தப்பி ஓடி உள்ளனர்.
என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டம் மணிகண்டன்:
இந்த நிலையில் நேற்று அதாவது 2025 ஆகஸ்டு 7ஆம் தேதி ஆன நேற்று கொலை குற்றத்தில் ஈடுபட்ட மணிகண்டன் தலைமுறைவாக இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்தது. சிக்கனூர் அருகே அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: 7வது நாளாக போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. சாலைகளில் நிரம்பி வழியும் குப்பைகள்.. என்ன காரணம்?
அப்போது மணிகண்டனை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் போது மணிகண்டன் சரவணகுமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டன் என்பவர் என் கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்:
அதனைத் தொடர்ந்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட தந்தை மூர்த்தி மற்றும் மற்றொரு மகன் தங்கபாண்டியை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தங்கப்பாண்டி எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காவல்துறை தான் பொறுப்பு என தெரிவித்தார். மேலும் மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஆகிய இருவருக்கும் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.