நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? 3 பேர் கதைு – பரபரப்பு சம்பவம்

College campus assault : சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கேண்டீனில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர், அதே கேண்டீனில் பணியாற்றிய ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? 3 பேர் கதைு - பரபரப்பு சம்பவம்

மாதிரி புகைப்படம்

Published: 

29 Jan 2026 20:07 PM

 IST

சென்னை, ஜனவரி 29 : சென்னை (Chennai) நந்தனத்தில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி கேன்டீன் உரிமையாளர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண், வேலை தேடி தனது நண்பர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். நண்பரின் உதவியின் பேரில், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இயங்கி வரும் கேண்டீனில் சுமார் 20 நாட்களுக்கு முன்பு உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

கேண்டீனில் பணிபுரிந்தவர்களால் பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், கேண்டீன் நடத்தி வரும் முத்து செல்வம், தலைமை சமையல்காரர் மற்றும் கான்டீன் ஊழியர் ஆகிய மூன்று பேர், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த நிலையில் இருந்த இளம்பெண், கல்லூரி பாதுகாவலர் ஒருவரிடம் நடந்த சம்பவத்தை அழுதபடியே தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், தலைமை சமையல் கலைஞர் குணசேகரன், கேண்டீன் பணியாளர் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதையும் படிக்க : தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப் பயண விவரம்…புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார்!

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

போலீஸ் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு லேசான மனநலம் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் இருந்து கூடுதல் தகவல்கள் பெறும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

கைது செய்யப்பட்ட முத்து செல்வம், கடந்த 12 ஆண்டுகளாக நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கேண்டீனை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய மாணவர் பேரவை அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..