குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப்பெட்டியில் பெறப்படவில்லை.. 3 மாதங்களில் முடிவுகள் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்..

TNPSC Group 4 Answer Sheets: தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 2025 ஜூலை 13ஆம் தேதி வரை பெறப்பட்டதாகவும், அட்டைப்பெட்டியில் வந்தது என்ற செய்தி உண்மை இல்லை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப்பெட்டியில் பெறப்படவில்லை.. 3 மாதங்களில் முடிவுகள் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Jul 2025 07:42 AM

குரூப் 4 விடைத்தாள்கள்:  குரூப் 4 விடைத்தாள்கள் சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு பாதுகாப்பாக வந்துள்ளதாகவும் அட்டைப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் செய்திகள் உண்மை இல்லை எனவும் தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது. 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் எழுதினர். இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும். தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்படவில்லை என்றும் தேர்வறைக்கு உள்ளேயே பிரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

குரூப் 4 தேர்வு ரத்து செய்ய வேண்டும்:

இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும் குரூப் 4 குளறுபடிகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

டி.என்.பி.எஸ்.சி அறிக்கை:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு குறித்த பல்வேறு சர்ச்சைகள் வெளியான நிலையில், தற்போது அதனை தெளிவுபடுத்தும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, “ ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் சீல் செய்யப்பட்ட ட்ரங்க் பெட்டிகளில் தான் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும், சேலம் மாவட்டத்தில் அட்டைப் பெட்டிகளில் ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் கொண்டுவரப்பட்டது என்ற செய்தி உண்மை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எந்த குளறுபடிகளும் நிகழவில்லை:

அதில், “ தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சீளிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 2025 ஜூலை 13ஆம் தேதி காலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. இதில் எந்தவிதமான குளறுபடிகளும் நிகழவில்லை.

Also Read: ஜூலை 28ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. சேலம் மாவட்டம் விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகள் உண்மையில்லை.

Also Read: TNPSC குரூப் 4 தேர்வு: ‘ஓஎம்ஆர் தாள்கள் பிரிக்கப்படவில்லை’ – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு!

இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. பத்திரிக்கை செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப்பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவை ஆகும். இவை தேர்வில் பயன்பட்டது போக மீதமிருக்கும் வினாத்தாள்கள் என்பதால் வழக்கமான நடைமுறையின் படி அந்தந்த மாவட்டத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.

3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும்:

வினாத்தாளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் ஜூலை 21, 2025 மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் இருப்பின் தெரிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தேர்வாணையத்தால் தெரிவித்தபடி இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது