2026 தேர்தலில் தவெகவின் சின்னம் என்ன? ஆலோசனையில் இறங்கிய விஜய்.. என்ன தேர்வு செய்வார்?

Tamizhaga Vettri Kazhagam : தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்தை தேர்வு செய்வது தொடர்பாக கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் 190 சின்னங்களை பட்டியலிட்ட நிலையில், இதில் தேர்வு செய்வது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருகிறார்.

2026 தேர்தலில் தவெகவின் சின்னம் என்ன? ஆலோசனையில் இறங்கிய விஜய்.. என்ன தேர்வு செய்வார்?

தமிழக வெற்றிக் கழகம் விஜய்

Updated On: 

24 May 2025 06:48 AM

சென்னை மே 24 :  2026 சட்டப்பேரவை தேர்தலில் (2026 tamil nadu assembly election) தனது கட்சியின் சின்னத்தை தேர்வு செய்வது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (tvk vijay) தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகைளை எடுத்து வருகிறார். கட்சி மாநாடு, 2ஆம் ஆண்டு தொடக்க விழா, பூத் கமிட்டி மாநாடு போன்றவற்றை நடத்தி முடித்துள்ளார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும், விஜய் இன்னும் ஒருசில மாதங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2026 தேர்தலில் தவெகவின் சின்னம் என்ன?

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சின்னம் தேர்வு செய்யும் பணிகளில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார்.  பொதுமக்கள் பரீட்சயமாகவும், நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும், சின்னத்தை தேர்வு செய்வது விஜயின் நோக்கமாக உள்ளது.

இதற்கு தேர்வு ஆணையமும் கிட்டதட்ட 190 சின்னங்களை தேர்வு செய்ய புதிதாக தொடங்கிய கட்சிகளுக்கு பட்டியலிட்டுள்ளது.  தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இருக்கும் போதிலும், அங்கீகரிக்கப்படட கட்சியாக இன்னும் உருவெடுக்கவில்லை.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு பொதுத் தேர்தலில் ஒருசில நிபந்தனைகளுடன் ஒரு பொதுவான சின்னம் ஒதுக்கப்படும். எனவே, பொது சின்னம் கேட்டு 2025ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அன்றோ அல்லது அதன் பின்னரோ தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆலோசனையில் இறங்கிய விஜய்

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே, தேர்தல் ஆணையம் கொடுத்த 190 சின்னங்களை விஜய் தேர்வு செய்யப்போகிறாரா அல்லது புதிய சின்னத்தை வரைந்து கொடுத்து அதனை கேட்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

இருப்பினும், எதிர்கால பிரச்னைகளை தவிர்க்க, தேர்தல் ஆணையம் பட்டியிலிட்ட சின்னங்களில் ஒன்றையே தமிழக வெற்றிக் கழகம் தேர்வு செய்ய உள்ளதாக தெரிகிறது. அதன்படி, இதுறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆலோசனையில், அதில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி மட்டை, பந்து, மைக், மோதிரம், விசில் உள்ளிட் சினங்களை அதிகம் கவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில், கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு என்பதால், கிரிக்கெட் மட்டை சின்னத்தை பல நிர்வாகிகள் பரிந்துரைத்ததாக தெரிகிறது.

இருப்பினும், விஜய் சின்னத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ” சின்னம் தொடர்பாக எங்கள் ஆலோசனைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னம் தமிழக வெற்றிக் கழகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பதையும் உறுதி செய்வதற்காக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையில் ஆலோசித்து வருகிறார்”  என்று தெரிவித்துள்ளார்.