சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இனி கனமழை இருக்கும்.. எத்தனை நாட்களுக்கு?

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இனி வரும் நாட்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இனி கனமழை இருக்கும்.. எத்தனை நாட்களுக்கு?

கோப்பு புகைப்படம்

Published: 

17 Jul 2025 06:19 AM

வானிலை நிலவரம், ஜூலை 17,2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நீடித்து வந்த நிலையில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 17 2025 தேதியான இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 18 2025 தேதியான நாளை கோவை, நீலகிரி, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஏழு நாட்களுக்கு நீடிக்கும் கனமழை:

இந்த மாவட்டங்களில் ஜூலை 22 2025 தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை வரும் நாட்களில் மாற்றம் இருக்காது என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மற்றும் ஈரப்பதமும் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: பயணிகளின் பாதுகாப்புக்காக ரயிலில் சிசிடிவி கேமரா – விஜயவாடாவில் துவங்கிய பணிகள்!

100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெயில்:

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை இருந்தாலும் அனேக மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.3 டிகிரி செல்சியசும், திருத்தணியில் 38.8 டிகிரி செல்சியசும், திருச்சியில் 38.7 டிகிரி செல்சியசும், நாகையில் 38.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்த வரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 36.4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Also Read: நேரலையில் பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்.. சிரியாவை தாக்கிய இஸ்ரேல்.. திக்திக் காட்சிகள்!

வறண்ட வானிலை நீடித்த மாவட்டங்களில் கனமழை இருக்கும் – பிரதீப் ஜான்:


இது தொடர்பான தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானின் பதிவில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிய மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், சென்னை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது