தமிழகத்தில் வெப்ப அலை எச்சரிக்கை.. கோடை மழையும் இருக்கு.. வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather Update: இன்று முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக படிப்படியாக உயரக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கோப்புப் புகைப்படம்
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், “தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை ராயசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. தமிழகத்தில் கோடை வெயின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதமடித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக வேலூரில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு வெப்ப அலையில் இருந்து எச்சரிக்கையாக இருக்க, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?:
இன்று (ஏப்ரல் 21) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிமீ) லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 24 முதல் 26 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்பநிலை மாற்றத்தின் தாக்கம்:
இன்று முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக படிப்படியாக உயரக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், இன்று முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படாலம்.
இதையும் படிக்க: ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.