Tamil Nadu Election 2026 Live: இன்று பரப்புரை கடைசி நாள்.. வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அரசியல் கட்சிகள்!
Tamil Nadu Election 2026 Live: தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE NEWS & UPDATES
-
பிரசாரம் முடிகிறது – தேர்தல் ஆணையம் விதிமுறைகள்
இன்று மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் தொடர்பாக எந்த வித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது
-
இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும்
வெளியூர் அரசியல் பிரமுகர்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு
-
கல்விக்காக பல திட்டங்கள்
கல்விக்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் மு க ஸ்டாலின் – அரவிந்த் கெஜ்ரிவால்
-
மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பை இந்தியாவே கண்டது – அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜகவின் பிடியில் அதிமுக இருக்கிறது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தான் அதிமுகவுக்கு ஏற்படும். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பை இந்தியாவே கண்டது – அரவிந்த் கெஜ்ரிவால்
-
தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசம் – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசம் – வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
வீடியோ
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…#வெல்வோம்_ஒன்றாக ! pic.twitter.com/wu9Kek7jAD
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 21, 2026
-
ஈகோவும் இல்லாதவர் ஸ்டாலின்- அரவிந்த் கெஜ்ரிவால்
முதல்வர் மு.க.ஸ்டாலின் போல ஒரு தலைவர் கிடைக்க மாட்டார். அவர் தமிழ்நாட்டுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார். அவர் எந்த வித ஈகோவும் இல்லாதவர் – அரவிந்த் கெஜ்ரிவால்
-
அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
மு.க.ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பாடுபடுகிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
-
சமூக வலைதளங்களிலும் கட்டுப்பாடு
இன்று கடைசி நாள் பரப்புரை என்பதால் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கட்சி சார்ந்த பதிவுகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது
-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும்
-
தேர்தல் கருத்துக்கணிப்பு
தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல் எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது
-
பிரசாரத்தை நிறைவு செய்யும் தலைவர்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், பழனிசாமி, சீமான் ஆகியோர் அவரவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள்
-
மாலை 6 மணியுடன் ஓய்கிறது. பிரசாரம்
சுமார் 20 நாட்களாக நடந்து வரும் தேர்தல் பரப்புரை, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 21 இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 2026 நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக் கூடங்களையும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தென் சென்னை பகுதிகளில் தவெக தலைவர் விஜய் ஏப்ரல் 21, 2026 அன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நந்தனம் YMCA மைதானத்தில் நாளை பிற்பகல் தவெக மாநில செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published On - Apr 21,2026 7:04 AM