Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முக ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Massive Chennai Rally: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 2025 மே 10 இன்று சென்னையில் "நமது ஒன்றுபட்ட ஒற்றுமை" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
முக ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணிImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 10 May 2025 06:59 AM

சென்னை மே 10: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M.K. Stalin) தலைமையில் இன்று (2025 மே 10) மாலை 5 மணிக்கு “நமது ஒன்றுபட்ட ஒற்றுமை” என்ற தலைப்பில் சென்னையில் பேரணி (Rally in Chennai) நடைபெறுகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கத்திலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இது காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கி நேப்பியர் பாலம் வரை நடைபெறும். சுமார் 25,000 பேர் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

முக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று பேரணி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 2025 மே 10 இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் பேரணி நடைபெற உள்ளது. “நமது ஒன்றுபட்ட ஒற்றுமை” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பேரணி, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக இந்திய ராணுவம் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என முதலமைச்சர் கூறியிருந்தார்.

பேரணி வழித்தடம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள்

இந்த பேரணி, காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திலிருந்து தொடங்கி நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெறும். இந்த பேரணியில் அமைச்சர்கள், முன்னாள் படைவீரர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 25,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 2025 மே 10 இ இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை சில சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

வாகனங்கள் தவிர்க்க வேண்டிய சாலைகள்

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரீசை நோக்கி செல்லும் வாகனங்கள் இன்று அனுமதிக்கப்படமாட்டா. அதன் பதிலாக, சத்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக செல்லுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதேபோல், பாரீசிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களும் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியே செல்ல வேண்டும்.

அண்ணா சாலையிலிருந்து எம்.டீ.சி பேருந்துகள் பயணிக்கும் மாற்றுப் பாதை

அண்ணா சாலையிலிருந்து வரும் எம்.டீ.சி பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு, ஜிபி சாலை, டவர் கிளாஸ், ஜி.ஆர்.எச். பாயிண்ட், ராயப்பேட்டை, ஹைரோடு சாலை, ஜம்புலிங்கம் தெரு, ஆர்.கே சாலை, வி.எம் தெரு மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக மத்திய கைலாஷ் சந்திப்பை அடைய வேண்டும்.

வணிக வாகனங்களுக்கு தடை

காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே சாலை, கதீட்ரல் சாலை மற்றும் வாலாஜா சாலைகளில் 2025 மே 10 இன்று  மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை வணிக வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தும் ஏற்பாடுகள்

பேரணியில் பங்கேற்பவர்களை இறக்கிவிடும் வாகனங்கள் காமராஜர் சாலையின் அருகிலுள்ள காந்தி சாலை, சுவாமி சிவானந்த சாலை, தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, மெரினா சர்வீஸ் சாலை, லூப் சாலை, லேடி வெல்லிங்டன் கல்லூரி, ஸ்கவுட் மைதானம் போன்ற இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வாகனங்கள் பொதுப்பணித்துறை மைதானத்தில் நிறுத்தலாம்.

VIP வாகனங்கள் மற்றும் பொது அறிவுறுத்தல்

VIP வாகனங்கள், கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்திடல் மைதானத்திற்குள் நுழையலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், காமராஜர் சாலையை தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒத்துழைப்பு வழங்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களை கடைபிடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்...
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!...
”மனித வெடிகுண்டாக மாற தயார்" அமைச்சர் சொன்ன பகீர் தகவல்
”மனித வெடிகுண்டாக மாற தயார்
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?
ரோகித்தை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?...
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!
அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைந்த உணவியல் கல்வி..!...
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்
இந்தியா பாகிஸ்தான் மோதல்.. கொதித்தெழுந்த ஜி7 நாடுகள்...
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கள்ளழகர் புறப்பாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்?- பேச்சுவார்த்தை தீவிரம்...
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு...
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை
பெற்ற தாய் செய்த கொடூரம்... 3 வயது குழந்தை கழுத்து நெரித்து கொலை...
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்
தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்...