மனிதர்களின் நடத்தை காரணமாக தீவிரமடைந்த காலநிலை மாற்றம், 2025 ஆம் ஆண்டை பதிவாகியுள்ள மிக அதிக வெப்பமான ஆண்டுகளில் மூன்றில் ஒன்றாக மாற்றியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொழில்துறை முன் காலத்திலிருந்து உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் தாண்டக் கூடாது என 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் நிர்ணயித்த வரம்பை, மூன்று ஆண்டுகளின் சராசரி வெப்பநிலை முதல் முறையாக மீறியதும் இதுவே எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வரம்பிற்குள் பூமியின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது பல உயிர்களை காப்பாற்றவும், உலகளாவிய அளவில் பேரழிவான சுற்றுச்சூழல் சேதங்களைத் தடுக்கவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.