MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?

கடந்த சில வாரங்களாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக அரசு நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன் அவரது சகோதரர் மு.க,முத்து காலமானதால் வருத்தத்தில் இருந்து வந்தார். இப்படியான நிலையில் சரியான ஓய்வு இல்லாததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவனையில் திடீர் அனுமதி.. என்ன நடந்தது?

மு.க.ஸ்டாலின்

Updated On: 

21 Jul 2025 14:27 PM

சென்னை, ஜூலை 21: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் (Apollo Hospitals) அனுமதிக்கப்பட்டுள்ளர். வழக்கமான காலை நடைபயிற்சியின் போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனை சென்ற அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பாதிப்பிற்கா  பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025 ஜூலை 22 மற்றும் ஜூலை 23 ஆகிய நாட்களில் கொங்கு மண்டலத்தில் அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி

மருத்துவமனை விளக்கம்:


அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் அனில் பி.ஜி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிகுறிகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தேவையான நோயறிதல் சோதனைகள் செய்யப்படுகின்றன” என்று கூறினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது வழக்கமான நடைப்பயணத்தின் போது லேசான தலைச்சுற்றலை எதிர்கொண்டபோது, சென்னை அண்ணா சாலைக்கு அருகில் அமைந்துள்ள கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் குறித்து திமுக தொண்டர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

ALSO READ: முதல்வர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுமா? புதிய செயலி மூலம் அறியலாம்

முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ரத்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாததை தொடர்ந்து, ஒரு கல்லூரியில் இந்து சமய மற்றும் அறநிலைய துறை சார்பில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், இன்று அதாவது 2025 ஜூலை 21ம் தேதி மாலை தனது மனைவி துர்கா ஸ்டாலினின் புதிய வெளியீட்டிற்காக ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்விலும் அவர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார். இருப்பினும், இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை.