எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்; தொண்டர்களின் நிலை என்ன? – தமிழிசை சௌந்தராஜன்

Tamilisai Soundarajan: கமல் ஹாசன் குறித்து பேசிய தமிழிசை சௌந்தராஜன், “ நடிகர் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் திமுகவுடன் கூட்டணி வைத்து எம்.பி ஆகிவிட்டார். இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களின் நிலை என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்; தொண்டர்களின் நிலை என்ன?  - தமிழிசை சௌந்தராஜன்

தமிழிசை சௌந்தராஜன்- கமல் ஹாசன்

Published: 

21 Sep 2025 17:40 PM

 IST

செப்டம்பர் 21, 2025: “பேருக்கு கட்சியை ஆரம்பித்த பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து கமல்ஹாசன் எம்.பி ஆகிவிட்டார். இப்போது அவரை நம்பி வந்த தொண்டர்களின் நிலை என்ன? இத்தகைய அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தர்ராஜன் விமானம் மூலம் கோவை பயணம் மேற்கொண்டார். பின்னர் மதுரையில் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் திமுக அரசின் ஆட்சி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது:

இதுகுறித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “மோடி தொழில் முனைவோர் எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன். எப்போதுமே ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில்தான் கலந்து கொள்வேன். இது ஒரு ஆக்கபூர்வமான நிகழ்ச்சி ஆகும். ஆனால் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இன்று வரை ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் உள்ளது.

மேலும் படிக்க: விஜய் முதலில் தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்.. அப்போது சொல்கிறேன் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..

இதுபோன்ற கவலை அளிக்கும் சம்பவங்கள் நடைபெறிக்கொண்டிருக்கும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. இதிலிருந்து, பாஜகவை கண்டு அவர்கள் எவ்வளவு பயத்தில் உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது” என்றார்.

மேலும் படிக்க: 1967, 1977, 2026.. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் – விஜய்..

எந்த நோக்கமும் இல்லாமல் கட்சியை தொடங்கி எம்.பி ஆகிவிட்டார் கமல்:


அவர் மேலும், “ஒருசிலர் எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு கட்சியை தொடங்குகிறார்கள். பின்னர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை. அரசியல் ரீதியாக ஏதேனும் ஒன்றை முன்னெடுத்தால்தான் மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவர்கள் சுயநலத்திற்காகவே கட்சிகளை உருவாக்குகிறார்கள். உதாரணத்திற்கு, நடிகர் கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் திமுகவுடன் கூட்டணி வைத்து எம்.பி ஆகிவிட்டார். இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களின் நிலை என்ன? இத்தகைய அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.