கொஞ்சம் கூட இரக்கம் இல்ல.. விஜய் பிரச்சார பேருந்துக்கு ஆயுத பூஜை.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

TVK Rally Stampede : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சார வாகனத்திற்கு ஆயுத பூஜை போடப்பட்டுள்ளது. பிரச்சார வாகனம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஆயுத பூஜை கொண்டாட்டப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கொஞ்சம் கூட இரக்கம் இல்ல.. விஜய் பிரச்சார பேருந்துக்கு ஆயுத பூஜை.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

தவெக தலைவர் விஜய்

Updated On: 

02 Oct 2025 17:18 PM

 IST

சென்னை,  அக்டோபர் 02 :  சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. விஜய் சென்ற பிரச்சார வாகனம், கட்சி நிர்வாகிகள் பயணித்த வாகனம், விஜயின் கார் உள்ளிட்டவற்றுக்கு ஆயுத பூஜை போடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிராக பதிவிட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 தேர்தலையொட்டி மக்கள் சந்திப்பு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். 2025 செப்டம்பர் 13-ஆம் தேதி தனது முதல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார். அடுத்து நாமக்கல் நாகப்பட்டினம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்படிதான் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார்.

இவரை காண காலை உடனே தொண்டர்களும் ரசிகர்களும் வேலுசாமிபுரத்தில் கூடியிருந்தனர். சுமார் 20,000 மேற்பட்டோர் கூடி இருந்த நிலையில் மாலையில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இது தொடர்பாக கரூர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு விஜய் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Also Read : விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? – திருமாவளவன் கேள்வி!

விஜய் பிரச்சார பேருந்துக்கு ஆயுத பூஜை

அந்த வீடியோ பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் விஜய் திமுகவை குற்றம் சாட்டியதாக பலரும் விமர்சித்து க்ஷ வருகின்றனர். அதோடு அந்த வீடியோவில் விஜய் மன்னிப்பும் கேட்கவில்லை, அதற்கான பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை. இதனால், விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

மேலும் சம்பவத்தன்று விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர் சென்றதும் பேசும் பொருளாக மாறியது. இப்படியாக கரூர் சம்பவத்தை விஜய் கையாளும் நிலையில், தற்போது புதிய சர்ச்சை வெடித்து இருக்கிறது. அதாவது இந்த துயரம் சம்பவம் நடந்த சிறிது நாட்களிலேயே தவெக ஆயுத பூஜை கொண்டாடியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் விஜய் சென்ற பரப்புரை வாகனத்திற்கு மாலை அணிவித்து பூஜை போட்டுள்ளனர்.

Also Read : ராமநாதபுரம் செல்லும் மு.க.ஸ்டாலின்.. விஜய்க்கு பதிலடி கொடுப்பாரா?

கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

இந்த துயர சம்பவம் காரணமாக பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டங்கள் கடை அடைப்புகள், நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு போன்றவை நடந்து வருகிறது. ஆனால், பனையூர் அலுவலகத்தில் தவெக ஆயுத பூஜை கொண்டாடியுள்ளது. பிரச்சார வாகனம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஆயுத விஜய் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன.

இவ்வளவு துயரத்துக்கு மத்தியிலும் இப்படி ஒரு கொண்டாட்டத்தை விஜய் நடத்தலாமா என்ற கேள்விகளை பலரும் முன்வைத்து வருகின்றனர். 41 உயிருக்கு பொறுப்பு ஏற்காமல், இரக்கமற்ற நிலையில் விஜய் செயல்படுவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.