தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்!
Tamil Nadu Weather Update | தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 14, 2025) ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
நேற்று (ஆகஸ்ட் 13, 2025) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதிகளில் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதுமட்டுமின்றி தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறி இருந்தது.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
அதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 14, 2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15, 2025 முதல் ஆகஸ்ட் 19, 2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வால்பாறையில் பயங்கரம்… சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 14, 2025) வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று (ஆகஸ்ட் 14, 2025) முதல் ஆகஸ்ட் 17, 2025 வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி தமிழக கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.