பொளக்கப்போகும் வெயில்.. ரெடியா இருங்க மக்களே.. பிரதீப் ஜான் கொடுத்த வார்னிங்..

Tamil Nadu Weather Update: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரவிருக்கும் நாட்களில் மழை இருக்காது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொளக்கப்போகும் வெயில்.. ரெடியா இருங்க மக்களே.. பிரதீப் ஜான் கொடுத்த வார்னிங்..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Sep 2025 14:25 PM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 25, 2025: வரவிருக்கும் நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல், 2025 செப்டம்பர் 27 அன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பதிவாகக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 2025 செப்டம்பர் 25 ஆம் தேதி (இன்று) கோவை, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 2025 செப்டம்பர் 26 அன்று, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தென்காசிக்கு கனமழை எச்சரிக்கை:

கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை இருந்தாலும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வரவிருக்கும் நாட்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜி.கே. மணியின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிர்ச்சியில் ராமதாஸ்.. பாமகவில் பரபரப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், வறண்ட வானிலையால் வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும்.

வரும் நாட்களில் அதிகரிக்கும் வெப்பநிலை – பிரதீப் ஜான்:

அதாவது, அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரவிருக்கும் நாட்களில் மழை இருக்காது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இனி சண்டேவும் பிரச்சாரம் இருக்கு.. 2026 பிப்ரவரி வரை விஜயின் மாஸ்டர் பிளான்..

கன்னியாகுமாரி, நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் கனமழை பதிவாகக்கூடும். தமிழகத்தைப் பொறுத்தவரையில், பாளையங்கோட்டையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. தற்போது மதுரையும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. மதுரையில் 38 டிகிரி செல்சியஸும், திருச்சியில் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகி வருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கடலூர், புதுச்சேரி, பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.