சில்லென மாறப்போகும் சென்னை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Weather Report: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றும், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னையில் இன்று மாலை மழைக்கான வாய்ப்பு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4, 2025 அன்று தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைந்து வந்த நிலையில் ஒரு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மே 8, 2025 சென்னை முதல் வேலூர் வரை. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மே 8 2025 மற்றும் மே 9 2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மே 10,2025 தேதி மற்றும் மே 11,2025 தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நாளையும் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு பருவ மழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி துவங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் அதாவது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் லேசான முதல் மிதமான மழை அடுத்த ஏழு நாட்களுக்கு பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சந்தியூர் சேலம் மாவட்டத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து பேச்சிப்பாறை கன்னியாகுமரி மாவட்டம், சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் 8 சென்டிமீட்டர் மழையும், ஓமலூர் சேலம் மாவட்டத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Watchout for Redthakkalis in between Chennai to Vellore belt today. Entire North TN coast from Delta to Chennai is in favorable spot.
===========
Only 3 stations crossed 38 C in Tamil Nadu. This may month has been a blessing with summer temp under control with rains happening… pic.twitter.com/quDXatFGUh— Tamil Nadu Weatherman (@praddy06) May 8, 2025
வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தற்போது வரை தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே 38 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், மே மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை சற்று தணிந்து காணப்படுவதாகும் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதன் காரணமாக உஷ்ணம் தணிந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மே 8 2025 ஆன இன்று சென்னை முதல் வேலூர் வரையும் வட தமிழ்நாடு கடலோர பகுதிகள் முதல் டெல்டா வரை வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் வேலூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெப்பநிலை என்பது 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் மாலை நேரம் மழைக்கான வாய்ப்பு சாதகமாக இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.