சென்னையில் இனி வரும் நாட்களில் மழை இருக்கும்.. பிரதீப் ஜான் சொல்வது என்ன?

Tamil Nadu Weather Report: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.3 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இனி வரும் நாட்களில் மழை இருக்கும்.. பிரதீப் ஜான் சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

13 Jul 2025 06:48 AM

வானிலை நிலவரம், ஜூலை 13, 2025: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் ஜூலை 12 2025 தேதியான நேற்று காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மாலை முதல் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை பொருத்த வரையில் பட்டினப்பாக்கம், எம் ஆர் சி நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பதிவானது. அதே சமயம் கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சேலையூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பதிவானது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் குறைந்துள்ள நிலையில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகி வருகிறது இதன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பதிவு இருக்கிறது.

கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் வரும் ஜூலை 15 2025 முதல் ஜூலை 18 2025 வரை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: உடலில் புரோட்டீன் குறைபாட்டினால் ஏற்படும் பிரச்னைகள் என்ன ? எப்படி சரி செய்வது?

அதிகபட்ச வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலையை பொருத்தவரையில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை நேரங்களில் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை இருந்தாலும் பகல் நேரங்களில் இந்த பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.3 டிகிரி செல்சியசும், நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் மழை இருக்கும் – பிரதீப் ஜான்:


இருப்பினும் மாலை நேரத்தில் நகரின் அனேக பகுதிகளில் கனமழை முதல் லேசான மழை பதிவாகியுள்ளது இது தொடர்பான தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானின் எக்ஸ் தள பக்கத்தில், கடல் காற்று நகரை நோக்கி நகர்ந்து வரும் காரணத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த கடல் காற்றின் காரணமாக வேலூர் மற்றும் நகரி பகுதிகளில் மழை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.