இன்று 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மிக கனமழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும். குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மிக கனமழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

மழை

Published: 

13 Jun 2025 06:27 AM

சென்னை, ஜூன் 13 : தமிழகத்தில் 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் (Tamil Nadu Weather Alert) கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை (Chennai Weather) பெய்யக் கூடும். தமிழகத்தில் 2025 மே மாதத்தில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. 2025 மே 30ஆம் தேதி வரை மழை பெய்து வந்த நிலையில், அதன்பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழக்ததில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மாலை நேரங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மிக கனமழை

இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.  வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, 2025 ஜூன 13ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அதோடு, நெல்லை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஜூன் 14ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழையும், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்


2025 மார்ச் 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதி கனமழையூம், கோவை, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஜூன் 16,17ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழையும், கோவை, நெல்லை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூன் 18ஆம் தேதி நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பெறுத்தவரை, 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.