மே 29, 30-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Rains:வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும், சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 2025 மே 29, 30 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 29, 30-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

மே 29, 30-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்

Published: 

28 May 2025 14:47 PM

தமிழ்நாடு மே 28: நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப்பகுதிகளில் கனமழை (Tamilnadu Weather) பெய்தது (அதிகபட்சம் சின்னக்கல்லார் – 15 செ.மீ.). புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை காணப்பட்டது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழைக்கு வாய்ப்பு அதிகம் எனவும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 2025 மே 29  இன்று கனமழை பெய்யும் எனவும், பிற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை இருக்கும். தமிழகம் முழுவதும் 2025 ஜூன் 3 வரை பரவலான மழை தொடரலாம் எனவும் தமிழகக் கரையோரங்கள், வங்கக்கடல், அரபிக்கடலில் 65 கிமீ வேகத்தில் சுழற்சி காற்று வீசக்கூடும் என்பதால் – மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பருவமழை செயல்பாடு அதிகரித்துள்ள நிலையில், வரும் 2025 மே 29 மற்றும் 30ம் தேதிகளில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தீவிர மழை எச்சரிக்கையாக தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்களில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை வாய்ப்பு உள்ளதாகவும், வீசிய சூறாவளிக்காற்று மற்றும் மழையுடன் கூடிய இடி மின்னலுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

கடந்த 24 மணி நேர வானிலை நிலவரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவானது.

அதிக மழை பெற்ற பகுதிகள் (செ.மீ.)

சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) – 15

அவலாஞ்சி (நீலகிரி) – 14

சாம்ராஜ் எஸ்டேட், மேல் பவானி (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) – தலா 13

ஊத்து, காக்காச்சி (திருநெல்வேலி) – தலா 12

சோலையார் (கோயம்புத்தூர்) – 11

மாஞ்சோலை (திருநெல்வேலி), குந்தா பாலம் (நீலகிரி) – தலா 10

பாபநாசம் (திருநெல்வேலி) – 8

மேலும் 1 முதல் 7 செ.மீ. வரை பல இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை நிலவரம்

அதிகபட்ச வெப்பநிலை: தஞ்சாவூர், தூத்துக்குடி – 37.0° செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை: கரூர் பரமத்தி – 20.5° செல்சியஸ்

வானிலை நிலை மற்றும் வாய்ப்புகள்

வடமேற்கு வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த நிலையில் வலுப்பெற்று வடக்கே நகரும் சாத்தியம் உள்ளது. தென்னிந்தியாவிற்கு மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதால், மழைக்கு வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

மாநில மழை முன்னறிவிப்பு

28-05-2025: தமிழகத்தின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். தரைக்காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை இருக்கக்கூடும்.

29 மற்றும் 30-05-2025: அதேபோல தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரலாம். குறிப்பாக மலைப்பகுதிகளில் கனமழை அதிகமாக இருக்கும்.

31-05-2025 முதல் 03-06-2025 வரை: தமிழகத்தில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை

இன்று (28-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

அதிகபட்ச வெப்பநிலை: 36–37°C | குறைந்தபட்சம்: 28°C

நாளை (29-05-2025):

இதேபோல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சம்: 35–36°C | குறைந்தபட்சம்: 28°C

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோரம், குமரிக்கடல், மன்னார் வளைகுடா: 28-05-2025 முதல் 01-06-2025 வரை சூறாவளிக்காற்று 40–50 கிமீ வேகத்திலும் இடைவேளையில் 60 கிமீ வரை வீசும்.

வங்கக்கடல் பகுதிகள்:

28-05-2025 முதல் 01-06-2025 வரை வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலின் பல பகுதிகளில் 45–55 கிமீ வேகத்திலும் இடையே 65 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அரபிக்கடல்பகுதிகள்:

28-05-2025 முதல் 01-06-2025 வரை தென்மேற்கு, மத்தியமேற்கு, தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு பகுதிகளில் 45–55 கிமீ வேகத்திலும் இடைவேளையில் 65 கிமீ வரை வீசக்கூடும். லட்சத்தீவு, மாலத்தீவு, கோவா, கர்நாடக, கேரள கடலோரங்களில் மாறாது சூழ்நிலை காணப்படும்.