Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லியில் ஜொலித்த தமிழகம்.. பத்ம விருதுகள் வாங்கிய தமிழர்கள் லிஸ்ட்!

Padma Awards 2025: 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 2025 மே 27 அன்று டெல்லியில் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் பத்மபூஷண் விருது பெற்றனர். வேலு ஆசான், குருவாயூர் துரை உள்ளிட்டோர் பத்மஸ்ரீ பெற்றனர். மொத்தம் 68 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் ஜொலித்த தமிழகம்.. பத்ம விருதுகள் வாங்கிய தமிழர்கள் லிஸ்ட்!
பத்ம விருதுகள் வாங்கிய தமிழர்கள் Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 28 May 2025 08:50 AM

டெல்லி மே 28: ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின விழாவில் பத்ம விருதுகள் (Padma Awards at Republic Day celebrations) அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி அறிவித்தது. இந்த ஆண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் 2025 மே 27 நேற்று நடைபெற்ற விழாவில் 68 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. நடிகை ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி பத்ம பூஷண் விருது பெற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வேலு ஆசான், குருவாயூர் துரை உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கு முன் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த தமிழர் சேதுராமன் பஞ்சநாதனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் பத்ம விருது வழங்கும் விழா

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (மே 27, 2025) நடைபெற்ற சிறப்பு விழாவில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மொத்தம் 68 பேர் விருதுகளைப் பெற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கெளரவம்

தமிழகம் சார்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பத்ம பூஷண் விருதுக்குரியவர்கள். மேலும் பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்ளிட்ட 10 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளனர். நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 28 குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

இந்த நிலையில் குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் மே 27, 2025 நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. பிரபல நடிகை மற்றும் பரதநாட்டியக் கலைஞர் ஷோபனா சந்திரசேகர், முன்னணி வர்த்தகர் நல்லி குப்புசாமி மற்றும் ஆன்மிகவாதி சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. இதில் நடிகை ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி குடியரசுத் தலைவரிடம் நேரில் வந்து விருதுகளைப் பெற்றனர்.

பத்ம விருதுகள் வாங்கிய தமிழர்கள்

 பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கலைஞர்கள்

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க வாத்தியக் கலைஞர் குருவாயூர் துரை, தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், எழுத்தாளர் சீனி விஸ்வநாதன் மற்றும் எம்.டி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மொத்த விருதுகளின் விபரம்

மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. அதன்படி, பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தமாக 139 பேர் விருதுக்குத் தேர்வாகினர். இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 28-ஆம் தேதி 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 68 பேருக்கான விருது வழங்கும் நிகழ்வு 2025 மே 27 நேற்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மற்ற விருதாளர்கள்

இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர் மற்றும் மறைந்த குமிதினி லாகியா, சாரதா சின்ஹா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்தோரின் குடும்பத்தினர் இந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

அமெரிக்காவில் தமிழர் பெருமை

சென்னையை பூர்விகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் சேதுராமன் பஞ்சநாதன், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவரும் பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.