தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

Tamil Nadu Weather Forecast:தமிழகத்தில் 2025 ஜூன் 1 முதல் 7 வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் லேசான மழை மற்றும் மேகமூட்டம் இருக்கும். வேலூரில் அதிகபட்ச வெப்பம் 37.7°C பதிவாகியுள்ளது. கடலோர மீனவர்களுக்கு 2025 ஜூன் 1-5 வரை சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

Published: 

01 Jun 2025 13:38 PM

 IST

சென்னை ஜூன் 01: தமிழகத்தில் (Tamilnadu Weather Update) சில இடங்களில் மழை பெய்தது; திருநெல்வேலி நாலுமுக்கில் அதிகபட்சமாக 2 செ.மீ. மழை பதிவானது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. வேலூரில் 37.7°C ஆக அதிகபட்ச வெப்பம் பதிவானது. 2025 ஜூன் 1-7 வரை தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மேகமூட்டம் மற்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது; வெப்பநிலை 37-38°C ஆக இருக்கலாம். 2025 ஜூன் 1-5 வரை கடலோரங்களில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் (Warning of Fisherman) என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவான மழை அளவுகள்:

தமிழகம் மற்றும் அதன் அண்டைப்பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
திருநெல்வேலியின் நாலுமுக்கு பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெய்யூர் (கன்னியாகுமரி), ஊத்து மற்றும் மணிமுத்தாறு (திருநெல்வேலி), சின்னக்கல்லார் மற்றும் வால்பாறை PTO (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளன.

வெப்பநிலை விவரம்:

வெப்பம் அதிகமாக பதிவானது வேலூரில் 37.7° செல்சியசாகும். சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22.0° செல்சியசாக பதிவானது.

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு:

மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் வேக மாற்றத்தால், வரும் நாட்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

01 மற்றும் 02 ஜூன் 2025: சில இடங்களில் இடியுடன் மழை வாய்ப்பு.

03 முதல் 07 ஜூன் 2025 வரை: தொடர்ச்சியாக சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை ஏற்படக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை:

01-06-2025: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38°C, குறைந்தபட்சம் 28-29°C வரை இருக்கலாம்.

02-06-2025: இதேபோன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

 

மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை:

தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்:
ஜூன் 1 முதல் 5 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும், இடையே 60 கிமீ வரை வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வங்கக்கடல் பகுதிகள்:

01 ஜூன்: மத்திய-தெற்கு வங்கக்கடல் மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று.

02-05 ஜூன்: மத்திய மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

01-05 ஜூன்: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல், வடகிழக்கு பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும். இதனால், தமிழக, கேரளா, கர்நாடகா கடலோர மீனவர்களுக்கு கடலில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!