தமிழகத்திற்கு பெரிய ஆபத்து… உயரும் கடல் மட்டம்.. என்னவெல்லாம் நடக்குமோ?
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 14 மாவட்டங்கள் கடல் மட்டம் உயர்வால் பாதிக்கக் கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
சென்னை, செப்டம்பர் 04 : தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரக்கூடும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கடல் மட்டம் உயர்ந்தால் வெள்ள பாதிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. உயிரிழப்புகள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றை சந்தித்து வருகிறது. அதிக அளவில் மழை பொழிவதற்கும், நிலச்சரவு, வெள்ளம், பூகம்பம், இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கு காலநிலை மாற்றமே காரணம். உலக நாடுகள் காலநிலை மாற்றத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தன.
இதில், நம் இந்தியா விதிவிலக்கல்ல. குறிப்பாக தமிழகமும் காலநிலை மாற்றத்தால் கடந்த காலங்களில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இப்படியான சூழலில், தமிழக கடலோர பகுதிகளுக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடல்களின் நீர்மட்டம் 2100ஆம் ஆண்டுக்குள் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஏ. ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Also Read : பூந்தமல்லி டூ சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரூட்… வந்தது கிரீன் சிக்னல்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
கடல் மட்டம் உயரும் அபாயம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த ஆய்வின்படி, தமிழக கடல்களின் நீர் மட்டம் உயரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2100 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 78.15 செ.மீ வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடியில் ஆண்டுக்கு 0.17 மி.மீட்டரும், நாகப்பட்டினத்தில் ஆண்டுக்கு 0.18 மி.மீட்டரும் அளவும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சென்னையில் ஆண்டுக்கு 0.55 மி.மீ உயரக் கூடும் எனவும் இதனால் சென்னை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் திருவாரூர், கடலூர் மற்றும் சென்னையின் கடலோரப் பகுதிகளும் ஆபத்தில் உள்ளன என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Also Read : தொடர் விடுமுறை.. ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம்?
பாதிக்கப்படும் 14 மாவட்டங்கள்
இதன் மூலம், 2100ஆம் ஆண்டுக்குள் சென்னையில் 52.16 செ.மீட்டரும், செங்பட்டில் 52.33 செ.மீட்டரும், விழுப்புரத்தில் 52.4 செ.மீட்டரும். கடலூரில் 55.06 செ.மீட்டரும். நாகையில் 52.79 செ.மீட்டரும், தஞ்சையில் 54.07 செ.மீட்டரும் கடல் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரக் கூடும் என கூறப்பட்டுள்ளது.
கடல் மட்டம் உயர்வால், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மற்றும் சென்னையின் சில பகுதிகள் போன்ற தாழ்வான மாவட்டங்களுக்கு வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும். நீர்நிலைகளில் கடல் நீர் ஊடுருவதால், கடலோரப் பகுதிகளில் விவசாயம், குடிநீர் மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.