மாணவர்கள் கவனத்திற்கு.. 1 முதல் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

Annual Exam Time Table; இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு.. 1 முதல் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Mar 2026 19:43 PM

 IST

சென்னை, மார்ச் 20, 2026: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரக்கூடிய சூழலில், இந்த ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான முழு ஆண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்வு, ஏப்ரல் 16ஆம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு அட்டவணை குறித்து தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தேர்தல் விதிமீறல்: அதிகாரிகளை புறக்கணித்த டாஸ்மாக் கடைக்கு சீல்..!

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஏப்ரல் 8 – தமிழ்
ஏப்ரல் 9 – விருப்ப மொழிப் பாடம்
ஏப்ரல் 13 – ஆங்கிலம்
ஏப்ரல் 16 – கணிதம்

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஏப்ரல் 6 – தமிழ்
ஏப்ரல் 7 – விருப்ப மொழிப் பாடம்
ஏப்ரல் 8 – ஆங்கிலம்
ஏப்ரல் 9 – கணிதம்
ஏப்ரல் 13 – அறிவியல்
ஏப்ரல் 16 – சமூக அறிவியல்

மேலும் படிக்க: விளாத்திக்குளம் மாணவி பாலியல் கொலை… குற்றவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்.. 10 நாள்களுக்கு பிறகு உடலை வாங்கிய பெற்றோர்!

ஆறாம் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஏப்ரல் 1 – தமிழ்
ஏப்ரல் 6 – விருப்ப மொழிப் பாடம்
ஏப்ரல் 7 – ஆங்கிலம்
ஏப்ரல் 8 – உடற்கல்வி
ஏப்ரல் 9 – கணிதம்
ஏப்ரல் 13 – அறிவியல்
ஏப்ரல் 16 – சமூக அறிவியல்

ஏழாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஏப்ரல் 1 – தமிழ்
ஏப்ரல் 6 – விருப்ப மொழிப் பாடம்
ஏப்ரல் 7 – கணிதம்
ஏப்ரல் 8 – உடற்கல்வி
ஏப்ரல் 9 – ஆங்கிலம்
ஏப்ரல் 13 – சமூக அறிவியல்
ஏப்ரல் 16 – அறிவியல்

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்