Taminadu Weather: ரெடியா இருங்க.. இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Rain Update: சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Taminadu Weather: ரெடியா இருங்க.. இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வானிலை நிலவரம்

Updated On: 

08 Sep 2025 07:25 AM

 IST

சென்னை, செப்டம்பர் 8: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இன்று (செப்டம்பர் 8) திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தமிழ்நாடில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது. ஆங்காங்கே மழையும் பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே வரும் நாட்களில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், விழுப்புரம், வேலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய தமிழக மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும்  இலேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: Lunar Eclipse: வானில் தோன்றிய இரத்த நிலா.. இந்தியா முழுவதும் கண்டு ரசித்த மக்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் வரும் நாட்களில் மிதமாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு ? வானிலை சொல்லும் தகவல்..

குற்றால சீசன்

குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்தாலும் அருவிகளில் தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அங்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். வறண்ட வானிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்வதால் சீசன் முடிந்தும் தண்ணீர் வரத்து இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.