MK Stalin Health scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களுக்கு இதுதான் பயன்.. விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Nalam Kakkum Stalin Scheme: தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தும் புதிய "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் ஆகஸ்ட் 2, 2025 அன்று தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மக்களைத் தேடி மருத்துவப் பரிசோதனை செய்வதற்கானது. இது, ஏற்கனவே செயல்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேம்படுத்தும்.

MK Stalin Health scheme: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களுக்கு இதுதான் பயன்.. விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published: 

28 Jul 2025 07:43 AM

சென்னை, ஜூலை 28: தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) ஆட்சியின் கீழ் பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதில், தற்போது மிக முக்கியமாக பார்க்கப்படுவது ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம். இதனுடன் வருகின்ற 2025 ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ’நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ (Nalam Kakkum Stalin Scheme) என்ற திட்டத்தினை சென்னை சாந்தோமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma. Subramanian), சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். இதில், இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு விஷயங்களையும் தெரிவித்தார்.

ALSO READ: பூரண நலத்துடன் வீடு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின்.. 3 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தல்..!

நலம் காக்கும் ஸ்டாலின்:

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் நல்லம் காக்கும் ஸ்டாலின் குறித்து பேசுகையில், “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இதயம் காப்போம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் என்று மிகப்பெரிய அளவிலான மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்:

அந்தவகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு மிக சிறந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வருகின்ற 2025 ஆகஸ்ட் 8ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது. தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களும் நலம் காக்கும் திட்டங்களாக இருந்தாலும் கூட இந்த திட்டம் என்பது மக்களை மிகப்பெரிய அளவில் கவரும் என்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, மக்கள் ஒவ்வொருவரும் தங்களது உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை மருத்துவமனைக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்கின்றனர்.

ALSO READ: முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. விரைவில் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐநா விருது வழங்கியுள்ள நிலையில், இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 என்ற திட்டமும் இன்று இந்தியாவில் வழிகாட்டியாக இருந்து வருகிறது. இப்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் வழிகாட்டும் திட்டங்களாக நமது அரசின் திட்டங்கள் உள்ளது. அந்த வகையில், “நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் திட்டமும் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.