‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி’ – வேதாந்தா நிறுவனத்தின் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு

Vedanta vs TN Govt : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை தொடங்க அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி - வேதாந்தா நிறுவனத்தின் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

11 Feb 2026 15:20 PM

 IST

சென்னை, பிப்ரவரி 11 :தூத்துக்குடியில் (Thoothukudi) உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் (High Court) மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் மேற்கொண்ட போரட்டத்தின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மக்களின் வாழ்க்கைக்கு பேராபத்தாக அமையும் என்று கூறி அந்த ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

வேதாந்தா நிறுவனத்தின் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போது தமிழக அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், அங்கும் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. பாதுகாப்பு கமிஷ்னரின் ஆய்வு இன்று தொடக்கம்!

இந்த நிலையில் கடந்த ஜனவரி 9, 2026 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்தது. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது. இதனயைடுத்து தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் துறை, கனிம வளத்துறை நிபுணர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் குழுவை அமைத்து பசுமை தாமிர ஆலை தொடர்பாக உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிக்க : 12ஆம் வகுப்பு மட்டுமே படித்து முடி மாற்று சிகிச்சை.. சென்னையில் சிக்கிய வட மாநில போலி மருத்துவர்கள்..

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறக்கவே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறினார். இதனையடுத்து வேதாந்தா தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?
இந்த 8 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை – கோழிகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!
“ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!
பொறுமை இழந்த கூட்டணி கட்சிகள்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? திமுக வெளியிட்ட அறிவிப்பு..
ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?
இனி ரூ.25,000 முதல் உடனடி ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் - எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு
மது இல்லாத திருமணங்களுக்கு ரூ.51,000 பரிசு - உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..