இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்.. ரூல்ஸை மாற்றிய தமிழக அரசு
Tamil Nadu UG College Admission : தமிழகத்தில் உயர்கல்வியில் இனி 40 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அதிகப்படியான வயதுவரம்பு 21 ஆக இருந்த நிலையில், தற்போது 40 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள்
சென்னை, அக்டோபர் 05 : தமிழகத்தில் உயர்கல்வியில் இனி 40 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அதிகப்படியான வயதுவரம்பு 21 ஆக இருந்த நிலையில், தற்போது 40 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். இதற்காக ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளை படிப்பதற்கு ஏராளமான மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் ஏராளமான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு கூடுதல் இடங்களை அறிவித்தது. அதோடு இல்லாமல் மாணவர்களின் நலன் கருதி புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்தது. இப்படியாக உயர்கல்வி துறையை தமிழக அரசின் படித்து வரும் நிலையில், தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் இளங்கலை படிப்பின் செயற்கைக்கான அதிகப்படியான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Also Read : வேளாண் படிப்புகளுக்கு போட்டித் தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு
இனி 40 வயது வரை கல்லூரிகளில் சேரலாம்
தற்போது, இளங்கலை படிப்பில் சேர்வதற்கு அதிகப்படியான வயதுவரம்பு 21 ஆக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்தாண்டுகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு இருந்தது. இதற்கிடையில், அரசு கலைக்கல்லூரியில் சேர்வதற்கு வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
Also Read : குரூப் 2 தேர்வுக்கு கட்டுப்பாடு.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஏற்ற தமிழக அரசு வயது வரம்பை அதிகரித்துள்ளது. அதன்படி, 2025-26 கல்வியாண்டு முதல் முதல் அரசு மற்றும் அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வருடங்களும், பழங்குடி பட்டியலின பெண்களுக்கு மூன்று ஆண்டுகளும் அதிகரித்து உயர்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே மருத்துவ படிப்பில் நீட் தேர்வுக்கு எந்த வயது நிர்ணயமும் இல்லை. மேலும், சட்டப்படிப்பிற்கும் வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.