சட்டமன்ற முடிவுக்கு எதிரானது… ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு – என்ன நடந்தது?

TN Govt vs Governor : சட்டமன்ற முடிவுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 4, 2025 அன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சட்டமன்ற முடிவுக்கு எதிரானது...  ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு - என்ன நடந்தது?

ஆர்.என்.ரவி - மு.க.ஸ்டாலின்

Published: 

04 Oct 2025 16:52 PM

 IST

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் (R.N.Ravi) தமிழக அரசுக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அக்டோபர் 2, 2025 அன்று காந்தி ஜெயந்தி அன்று கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தியடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் தினசரி செய்தித்தாள்களை படிக்கும்போது சில கிராமங்களில் தலித் மக்கள் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருப்பது தெரிய வந்தது. தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டை போல வேறு எங்கும் இவ்வளவு மோசமாக நடக்கவில்லை என்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆளுநருக்க எதிராக தமிழக அரசு வழக்கு

கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்லது. ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற முடிவுக்கு எதிரானது எனவும், இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை – காரணம் இதுவா?

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்

கடந்த ஏப்ரல் 24,2024 அன்று பாஜக மற்றும் அதிமுக தவிர்த்து மற்ற அனைத்து கட்சியினரும் முதல்வர் ஸ்டாலினிடம் கலைஞர் பல்கைலைக்கழகம் உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான மசோதாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட இளைஞர்களின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இந்த பகுதி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு இந்த பல்கலைக்கழகம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : விஜய்க்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு? களமிறங்கும் கமாண்டோக்கள்… சிஆர்பிஎப் பரிந்துரை!

இந்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கலைஞர் கருணாநிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.