விஜய்க்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு? களமிறங்கும் கமாண்டோக்கள்… சிஆர்பிஎப் பரிந்துரை!
TVK Leader Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தவெக கூறிய நிலையில், விஜய்க்கு ஒய் பிளஸ் அல்லது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க சிஆர்பிஎப் உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, அக்டோபர் 06 : தவெக தலைவர் விஜய்க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் , அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க சி ஆர் பி எஃப் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் பிரதமர் முதல்வர்கள் கட்சி தலைவர்கள் என முக்கிய அதிகாரிகளை வகிப்பவர்களுக்கு உளவுத்துறையில் அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தொடர்ந்து இசட் பிரிவு, ஒய் பிளஸ் பிரிவு, ஒய் பிரிவு, எக்ஸல பல்வேறு வகையான பிரிவுகள் இருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
இதில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் துப்பாக்கி இந்தியா எட்டு முதல் 11 போலீசார் மற்றும் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். விஜய்க்கு வைப்பிரிவு பாதுகாப்பு அமலில் இருக்கும் நிலையில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தடைக்க தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் ஒட்டு மொத்த தமிழகத்தை உலுக்கியது. தவெக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Also Read : ’ஒருவர் மீது பழி போட விரும்பல’ கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு




விஜய்க்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு?
சமீபத்தில் பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறக்கும் தெரியாமல் மாடியில் ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என சிஆர்பிஎப் காமத்தை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. தற்போது விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒய் பிளஸ் பிரிவாகவோ அல்லது இசட் பிரிவாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என சி ஆர் பி எஃப் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாஜக, அதிமுக ஆதரவு அளித்து வருகிறது. இது கூட்டணிக்கான சமிக்ஞை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், விஜயின் பாதுகாப்பை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிடலாம்.
Also Read : ‘உண்மை வெளியே வரும்’ கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி!
இசட் பிரிவு பாதுகாப்பு என்பது முதல்வர்கள், மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்படும் உயர்நிலை பாதுகாப்பு அமைப்பாகும். இதில் 22 பேர் கொண்ட பாதுகாப்பு குழு இருக்கும். அதில் 4 பேர் சிஆர்பிஎப் கமாண்டோக்கள், போலீசார் இடம்பெறுவார்கள். மேலும், ஒரு குண்டு துளைக்காத வாகனம் ற்றும் 4 பாதுகாப்பு வாகனங்கள் இருக்கும். ஒய் பிளஸ் பாதுகாப்பு என்பது ஐந்து பணியாளர்கள், ஒரு சிஆர்பிஎப் மற்றும் நான்கு போலீசார் இருப்பார்கள்.