Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு – தமிழக அரசு அறிவிப்பு

Welfare Scheme: தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து அக்டோபர் 23, 2025 அன்று அரசாணை வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்த திட்டம் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு – தமிழக அரசு அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Oct 2025 19:35 PM IST

சென்னை, அக்டோபர் 23: தமிழ்நாடு அரசு, தூய்மைப் பணியாளர்களின் (Sanitation Worker) நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது  தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என தினமும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி, அக்டோபர் 23, 2025 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இந்தத் திட்டம் பின்னர், மாநிலம் முழுவதும் உள்ள பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதன்படி, தூய்மைப் பணியாளர்கள் கழிவுகளை கையாளும் போது சரும நோய்கள் மற்றும் உடல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கு தனிப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இதையும் படிக்க : ரயில் பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்.. ரூ. 757 கோடி மதிப்பில் திட்ட ஒப்புதல்..

மேலும், பணியில் இருக்கும் போதே உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், தூய்மைப் பணியாளர்கள் தங்களது சுய தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.3.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் எனவும், இதற்காக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.  அத்துடன், ரூ.5 லட்சம் மதிப்பிலான கூடுதல் காப்பீட்டு திட்டமும் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்காக  30,000 புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு நேரடியாக வீடுகள் கட்டப்படும எனவும்,
மாவட்ட மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், தூய்மைப் பணியாளர்களின் மாணவர் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகைழங்கும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சிவகங்கையில் நாளை முதல் 31 வரை 144 தடை – விவரம் இதோ

முதற்கட்டமாக சென்னையில் அறிமுகமாகும் இலவச உணவுத் திட்டம்

இந்த புதிய இலவச உணவுத் திட்டம், முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின், திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு
அதை மாநிலம் முழுவதும் உள்ள பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.