பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி.. நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?

Tamil Nadu School New Seating Arrangements : தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் இருக்கையை 'ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், இதற்கு பள்ளிக்கல்வித்துறை தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பள்ளிகளில் ’ப வடிவில் இருக்கை வசதி..  நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?

மாணவர்கள்

Updated On: 

13 Jul 2025 14:36 PM

சென்னை, ஜூலை 13 : கேரளாவைப் போல் தமிழகத்திலும் ’ப’ வடிவத்தில் இருக்கைகளை (PA Shaped Bench Arrangement) மாற்றி மாணவர்களை அமரவைக்க பள்ளிக் கல்வித்துறை (Tamil Nadu Education Department) அறிவித்த நிலையில், தற்போது அதனை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற மலையான படத்தில் பள்ளி வகுப்பறையில் ‘ப’ வடிபில் மாணவர்கள் அமர வைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் மாணவர்களிடையே இருக்கும் கடைசி இருக்கை எண்ணம் மாற்றப்பட்டு, மாணவர்கள் நேரடியாக கவனம் செலுத்துவது அதிகரிக்கும் என்பது போன்ற காட்சிப்படுத்தப்பட்டது. இதனை கேரளாவில சில பள்ளிகளில் சமீபத்தில் பின்பற்றப்பட்டது. மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், ஆசியர்களுடனான உரையாடல் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை பல மாநிலத்தையும் ஈர்த்தது.

பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் ‘ப’ வடிவில் இருக்கைகளை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை 2025 ஜூலை 12ஆம் தேதியான நேற்று உத்தரவை பிறப்பித்து இருந்தது. அனைவரும் சமம் என்பதை பள்ளியிலேயே மாணவர்களுக்கு தெரிய வைக்கும் முறையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். முதற்கட்டமாக அனைத்து பள்ளிகளில் சோதனை அடிப்படையில் ’ப’ வடிவ இருக்கைகளில் மாணவர்கள் அமர வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Also Read : சாதி மோதல்கள்… ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  மேலும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ’ப’ வடிவில் மாணவர்களை அமர வைத்தால்,  மாணவர்களுக்கு கழுத்து வலி, கண் வலி ஏற்படும் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும், எப்படி பார்த்தாலும் மாணவர்கள் கடைசி பெஞ்சில் தான் அமருவார்கள் எனவும் கூறி வருகின்றனர். மாணவர்களின் உடல்நலனை கருத்தில் இந்த நடைமுறை  தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.

நிறுத்தி வைத்ததா அரசு?

இப்படியான சூழலில், பள்ளிகளில் ‘ப’ வடிவிலான இருக்கை வசதி தொடர்பான உத்தரவை தமிழக  நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், இதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை அமைப்பை நிறுத்தவில்லை என்றும் சமூக வலைதளக்ஙளில் சில தவறான தகவலை பரப்பி வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Also Read : 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!

மேலும், ‘ப’ வடிவ இருக்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம், வரும் நாட்களில் பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கப்படலாம். சோதனை அடிப்படையில் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டு, மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.