திடீரென சிவி சண்முகத்தை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் பரபரப்பு விளக்கம்!
Nainar Nagendran Meets CV Shanmugam : சமீபத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்
சென்னை, செப்டம்பர் 26 : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். இது சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சந்திப்பு குறத்து 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான இன்று விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள. அதிமுக பாஜக கூட்டணி தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அமைந்தது. ஆனால், அதிமுக மற்றும் பாஜகவில் சலசலப்புகள் இருந்து வருகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என சீனியர் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் விலகியுள்ளனர். இதனால், அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க குரல் கொத்த செங்கோட்டையன், அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து சி.வி.சண்முகம் செங்கோட்டையனை காட்டமாக விமர்சித்து இருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததற்காக நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார் என மறைமுகமாக செங்கோட்டையனை விமர்சித்தார். இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் உள்ள சிவி சண்முகத்தின் வீட்டிற்கு சென்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது , ஒரு மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தற்போது நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
Also Read : ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?
சிவி சண்முகத்தை சந்தித்தது ஏன்?
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், “சி.வி.சண்முகம் கூட்டணி கட்சி தலைவர். முன்னாள் சட்ட அமைச்சர், கல்வி அமைச்சராக இருந்தவர். என்னுடைய நெருங்கிய நண்பர். நான் சென்னையில் திருச்சி செல்லும்போது, அவர் வீட்டில் இருந்தார். அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினேன். சி.வி.சண்முகத்தை சந்தித்ததில் எந்த வியப்பும் இல்லை.
Also Read : களத்தில் இறங்கும் நயினார் நாகேந்திரன்.. அக். முதல் வாரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம்..
கூட்டணி மட்டும் வைத்து வாக்காளிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், கூட்டணி அவசியம். 2001ல் பலம் வாய்ந்த கூட்டணியை கருணாநிதி வைத்திருந்தார். ஆனால், அம்மா (ஜெயலலிதா) தான் ஆட்சிக்கு வந்தார். 1980ல் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியை திமுக, காங்கிரஸ் வைத்திருந்தனர். ஆனால், எம்.ஜி.ஆர் சின்ன சின்ன கட்சியை வைத்திருந்தார். அன்று எம்ஜிஆர் தான் முதல்வரானார். டிசம்பர் மாதத்திற்குள் எங்கள் கூட்டணி முழுமையாக அமையும். 2025 அக்டோபர் 12ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் தரிசனம் செய்த பின், மதுரையில் பரப்புரையை தொடங்குவேன்” என்றார்.