Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu Class 12 Result 2025 : இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி.. எத்தனை சதவீதம் தெரியுமா?

Tamil Nadu Class 12 Result 2025 Pass Percentage | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08, 2025) வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த மாவட்டங்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன, மாணவர்கள் மற்றும் மாணவிகள் எத்தனை சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tamil Nadu Class 12 Result 2025 : இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி.. எத்தனை சதவீதம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 08 May 2025 11:26 AM

சென்னை, மே 08 : தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் (12th Board Exam Result) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 03, 2025 முதல் மார்ச் 25, 2025 வரை 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் இன்று (மே 08, 2025) காலை சரியாக 9 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், எந்த எந்த மாவட்டங்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது. எந்த பாடத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தில் மார்ச் 03, 2025 முதல் மார்ச் 25, 2025 வரை 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சுமார் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 95.03 சதவீதம் அதாவது 7 ,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,472 (96.70 சதவீதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவீதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

பள்ளி வாரியான தேர்ச்சி விகிதங்கள்

  • அரசு பள்ளிகளில் 91.94 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • தனியார் சுய நிதி பள்ளிகளில் 98.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • இருபாலர் பள்ளிகளில் 95.30 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • பெண்கள் பள்ளிகளில் 96.50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • ஆண்கள் பள்ளிகளில் 90.14 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

  • 98.82 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
  • 97.98 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
  • 97.53 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
  • 97.48 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் நான்காவது இடம் பிடித்துள்ளது.
  • 97.01 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

அதிக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் – முதல் 5 மாவட்டங்கள்

  • 98.32 தேர்ச்சி விகிதத்தை பெற்று அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
  • 96.88 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
  • 95.64 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
  • 95.06 தவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று கன்னியாகுமரி மாவட்டம் நான்காவது இடம் பிடித்துள்ளது.
  • 94.99 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று கடலூர் மாவட்டம் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!
தமிழில் வெளியான பெஸ்ட் வாழ்க்கை வரலாற்று படங்களின் லிஸ்ட் இதோ!...
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு தடை? உயர்நீதிமன்றம் உத்தரவு...
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!...
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?...
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!
போர் பதற்றம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து..!...
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் ..
சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - பிரதீப் ஜான் .....
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!
சித்ரா பௌர்ணமி .. அனைவரும் செல்ல வேண்டிய சித்திரகுப்தன் கோயில்!...
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?...
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?...
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?...