உலகம் முழுவதும் அதிக எடை மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், 2008ஆம் ஆண்டு ஜப்பான் ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம் கவுண்டர்மெஷர் ஆக்ட்’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. நோய்கள் வந்த பிறகு சிகிச்சை செய்வதைவிட, அவை வராமல் தடுப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஜப்பானில் 40 முதல் 74 வயதுDக்குட்பட்ட குடிமக்களுக்கு ஆண்டுதோறும் உடல்நலப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.