குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கல்விக்காக ரஷ்யாவுக்கு சென்ற நிலையில், கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்டதாகக் கூறி, உக்ரைனிலிருந்து ஒரு வீடியோ மூலம் உதவி கோரியுள்ளார். அவர், எந்த சூழ்நிலையிலும் இந்திய இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர வேண்டாம் என எச்சரித்துள்ளார். இந்த மாணவரின் பெயர் சாஹில் முகமது ஹுசேன். இவர் குஜராத்தின் மோர்பி பகுதியைச் சேர்ந்தவர். மாணவர் விசாவில் ரஷ்யாவுக்கு சென்ற அவர், அங்கு படிப்புடன் சேர்த்து ஒரு கூரியர் நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்து வந்ததாக கூறினார்.